மாணவிகள் கழிப்பறையில் கேமரா வைத்து வீடியோ… அலிமத்துல் ஷைஃபா, ஷபானாஸ், ஆலியா சஸ்பெண்ட்!

மாணவிகள் கழிப்பறையில் கேமரா வைத்து வீடியோ… அலிமத்துல் ஷைஃபா, ஷபானாஸ், ஆலியா சஸ்பெண்ட்!

Share it if you like it

உடுப்பியில் தனியார் கல்லூரி மாணவிகளின் கழிப்பறையில் கேமராவை மறைத்து வைத்து சக மாணவிகளை வீடியோ எடுத்து மாணவர்களுக்கு அனுப்பிய கொடூர சம்பவம் அரங்கேறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்செயலில் ஈடுபட்ட அலிமத்துல் ஷைஃபா, ஷபானாஸ், ஆலியா ஆகியோரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு குறிப்பிட்ட வகுப்பில் படிக்கும் மாணவிகள் சிலர், கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து மாணவிகள் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற காட்சிகளை வீடியோ எடுத்திருக்கிறார்கள். இந்த வீடியோக்களை தங்களது ஆண் நண்பர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்கள், அந்த வீடியோவை தங்களது வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர, ஒரு கட்டத்தில் மேற்கண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள், மேற்கண்ட சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் பல நாட்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் அலிமத்துல் ஷைஃபா, ஷபானாஸ், ஆலியா ஆகிய 3 மாணவிகள் கல்லூரிக்குள் இருக்கும் கழிப்பறையில் செல்போன்களை மறைத்து வைத்து, சக மாணவிகளை வீடியோ எடுத்து தங்களுடைய ஆண் நண்பர்களுக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது. பின்னர், 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தினர்.

அவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் விசாரித்தபோது, மேற்கண்ட 3 பேரும் சக மாணவிகளை பழிவாங்கும் நோக்கில் இந்த கொடூரத்தை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகத்தினர் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். மேவலும், அவர்கள் மீது போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, 3 மாணவிகளின் செல்போன்களையும் சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Share it if you like it