டேய் பேச்ச நிப்பாட்ரா… திருமாவை தெறிக்கவிட்ட மலேசிய மக்கள்!

டேய் பேச்ச நிப்பாட்ரா… திருமாவை தெறிக்கவிட்ட மலேசிய மக்கள்!

Share it if you like it

மலேசியாவில் நடந்த உலகத் தமிழர் தேசிய மாநாட்டில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, டேய் பேச்சை நிப்பாட்ரா என்று சொல்லி எதிர்ப்புத் தெரிவித்து சிலர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி திருமாவளவன், பறையர் என்று சொல்லி வந்தால் செருப்பால் அடியுங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பறையர் சமூகத்தினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், திருமாவளவனை கண்டித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த சூழலில், மலேசியாவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் 11-வது உலகத் தமிழர் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், தமிழ் தேசியம் குறித்து பேசும்போது தமிழ் தேசியம் என்கிற பெயரில் இனவாதம், மதவாதம் கூடாது என்று கூறினார். அப்போது, டேய் பேச்சை நிப்பாட்ரா என்று சொல்லி திருமாவளவனுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்தனர். மேலும், பறையர்களை பற்றி இழிவாகப் பேசியதோடு, தமிழ் தேசியம் பற்றி பேச அருகதை இல்லை, தலைப்பும் சரியில்லை என்று கூச்சலிட்டனர். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்களை விழா ஏற்பாட்டாளர்கள் சமாதானப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர். இதன் பிறகு, மாநாட்டு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார் திருமாவளவன். தமிழகத்தில் மட்டுமே திருமாவளவனுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது வெளிநாட்டிலும் எதிர்ப்புக் குரல் கிளம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it