மல்லிகார்ஜுன கார்கே அடம்… காங் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி!

மல்லிகார்ஜுன கார்கே அடம்… காங் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராகுல் காந்திக்கு தனது ஆதரவினை தெரிவித்து இருப்பது மற்ற காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவரது, தலைமையில் அக்கட்சி சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் படுதோல்வியே பரிசாக கிடைத்து இருக்கிறது. இதன்காரணமாக, பல மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதையடுத்து, கட்சியின் அடிமட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரை பல்வேறு மாற்றங்களை உடனே செய்ய வேண்டும். அப்போது, தான் கட்சி வளரும் என காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவர்கள் சோனியாவிற்கு கடிதம் எழுதி இருந்தனர்.

காங்கிரஸ் தலைவர்களின் கடிதத்திற்கு பதில் அளிக்க வேண்டிய சோனியா. அவர்களை, முற்றிலும் புறம் தள்ள ஆரம்பித்தார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தலைவர்கள் அக்கட்சிக்கு குட்பாய் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கபில் சிபில், ஜோதிராதித்ய சிந்தியா என பல முக்கிய புள்ளிகள் காங்கிரஸை விட்டு வெளியேறினர்.

இதனை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர், மத்திய அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் குலாம் நபி ஆசாத். இவர், காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்தவர். இப்படிப்பட்ட நபர் தான், காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகி இருக்கிறார். இதுதான், அக்கட்சி தொண்டர்களையும் தாண்டி எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசுப்பொருளாக மாறி இருக்கிறது.

ராகுல் காந்தியின் முதிர்ச்சியற்ற பேச்சு மற்றும் செயல்பாடுகள் பிடிக்காமல் காங்கிரஸ் எனும் பேருந்தில் இருந்து ஒவ்வொரு நாளும் நெட், போல்ட் என கழன்று விழுந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க, ராகுல் காந்தியை விட்டால் வேறு யாரும் கிடையாது. தலைவர் பொறுப்பை ஏற்குமாறு ராகுலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே கூறியிருக்கிறார். கட்சியை மீட்க நாம் முயற்சி செய்தால், இவர் கட்சியை புதைக்க வழி தேடுகிறார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it