கம்யூனிஸ்ட் கட்சியை வழக்கம் போல மூத்த பத்திரிகையாளர் மணி மிக கடுமையாக சாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் மணி. இவர், யூ டியூப் இணையதள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் ;
கம்யூனிஸ்ட் கட்சியை தி.மு.க.வில் இணைத்து விடுங்கள். ஆனால், அவன் உங்களை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டான். வெளிப்படையாக, வங்கி கணக்கில் சிபிஐக்கு ரூ.15 கோடி மற்றும் சிபி(ஜ)எம்-க்கு ரூ. 10 கோடி எதனை வைத்து நியாயப்படுத்த முடியும்.
இன்றைக்கு என்ன நிலைமை, ஸ்டாலின் அரசு வந்த பின்பு, எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தீர்கள். கலைஞர், ஜெயலலிதா உடன் கூட்டு சேர்ந்து, வெற்றி பெற்ற பின்பு அரசுக்கு எதிராக இரண்டே மாதங்களில் தெருவில் நிற்பீர்கள். இன்றைக்கு, அரசு ஊழியர்கள் தமிழ்நாட்டில் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் வயிறு எரிந்து கிடக்கிறார்கள். செவிலியர்கள் அடிவயிறு கலங்கி நிற்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றவில்லை.
தி.மு.க.வில் கட்சியின் அடிமட்டத்தில் துவங்கி தலைமை வரை வாரிசு அரசியல் உள்ளது. அப்பா, மகன், பேரன், தங்கை மற்றும் மாமன் மகள் உள்ளிட்டவர்கள் இருப்பார்கள். இவர்களோடு, மட்டுமல்ல 90 % சதவீத மாவட்ட செயலாளர்களில் அவரது மகன், மகள், மருமகள், மருமகன், மச்சான், மாப்பிள்ளை என அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். சாமானிய மனிதன் எப்படி? தி.மு.க.வை நோக்கி வருவான். இதனை, சுட்டிக்காட்டும் இடத்தில் கம்யூனிஸ்ட் இல்லை. உனது வாக்கு வங்கியே வெறும் 1% சதவீதம் தான். இதில், உனக்கு எதற்கு இவ்வளவு ஆணவமான பேச்சு என மூத்த பத்திரிகையாளர் மணி மிக கடுமையாக சாடியிருக்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து அவமதிப்பு செய்தும் வரும் மூத்த பத்திரிகையாளர் மணியை கண்டித்து அறிக்கை விட தோழர் அருணன் முன்வர வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.