மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்!

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை… போதைப் பொருள் மாஃபியாக்கள்தான்: அதிர்ச்சி தகவல்!

Share it if you like it

மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் இட ஒதுக்கீடு இல்லை என்பதும், பாப்பி எனப்படும் போதைப் பொருளுக்காக மாஃபியாக்கள் தூண்டிவிட்டது என்பது கள ஆய்வில் அம்பலமாகி இருக்கிறது.

மணிப்பூரில் கடந்த 2 மாதமாக கலவரம் நடந்து வருகிறது. அங்கு வசிக்கும் மெயிட்டி மற்றும் குக்கி இனத்தவருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக இக்கலவரம் வெடித்திருப்பதாகக் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் இது இட ஒதுக்கீட்டுக்கான கலவரம் இல்லை என்பதும், பாப்பி என்னும் போதைப் பொருளுக்காக மாஃபியாக்களால் தூண்டிவிடப்பட்டது என்பதும் அம்பலமாகி இருக்கிறது. அதாவது, மணிப்பூரில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் குக்கி எனும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். அதேசமயம், பழங்குடியினர் என்பதால் எஸ்.டி. சான்று பெற்று, அரசு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். அதேசமயம், மெயிட்டி இனத்தில் ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர். இவர்கள் ஓ.பி.சி.யில் வருகின்றனர். ஆகவே, இவ்விரு சமூகத்தினரும் தங்களுக்கும் எஸ்.டி. சான்று வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாகவே, மெயிட்டி மற்றும் குக்கி இனத்தவர் இடையே கலவரம் மூண்டதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில்தான் தமிழகத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் தொலைக்காட்சி ஒன்று கள ஆய்வில் ஈடுபட்டது. அந்த ஆய்வில் கிடைத்த தகவல்…. குக்கி இனத்தவர் மலைப்பகுதியில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கும் மேலான பாப்பி என்னும் போதைப் பொருளை பயிரிட்டு வருகின்றனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் போதை பொருள் மாஃபியாக்கள் அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, மெயிட்டி இனத்தவரை பயன்படுத்தி பாப்பி போதைப் பொருளை பயிரிட்டு வந்தனர். ஆனால், பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, போதை பொருளை ஒழிக்கும் நடவடிக்கை தொடங்கி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத மாஃபியாக்கள், இட ஒதுக்கீட்டை சாக்காக வைத்து குக்கி இன மக்களை தூண்டி விட்டு கலவரத்தில் ஈடுபட வைத்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

இது தொடர்பான விரிவான தகவலை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்…


Share it if you like it