ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் கூறும் மணியரசன்..! ஈ.வெ.ரா.,வின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று கூற முன்வருவாரா? 

ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் கூறும் மணியரசன்..! ஈ.வெ.ரா.,வின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று கூற முன்வருவாரா? 

Share it if you like it

  • ஒரு பூஜை கூட நடக்காமல் 11,999 கோயில்களின் நிலை உள்ளது.
  • 34,000 கோயில்கள் ஆண்டுக்கு ரூ .10,000 க்கும் குறைவாக வருமானத்தை வைத்து கொண்டு போராடுகிறது.
  • 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஒரு நபர் மட்டுமே இருக்கிறார்!
  • பக்தர்கள் கோயில்களை பராமரிக்கும் படி விட்டு விடுங்கள். என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர். சத்குருவின் கருத்திற்கு பிரபல நடிகர் சந்தானம் தனது ஆதரவினை தெரிவித்து இருந்தார்.

அதே போன்று பிரபல நடிகை கஸ்தூரி அவர்களும் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

நானும் யாத்திரை சென்று இருக்கிறேன், எங்கள் புனித இடங்கள் இதயமற்ற முறையில் சுரண்டுவதற்காக. என் இதயம் இரத்தம் கசியும். மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே கோவில்களுக்கும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
சத்குரு குரல் கொடுத்து உள்ளார். நம் நம்பிக்கையை மீட்பதற்கு நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் தமிழர் ஆன்மீகத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்; கோவை ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

  • திராவிட ஆட்சியில் எவ்வளவு புனித ஆலயங்கள் மிக மோசமான நிலைக்கு சென்ற பொழுது வாய் திறந்தாரா?
  • அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்த பொழுது வாய் திறந்தாரா?
  • கோவில் சொத்துக்களை கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், களவாடிய பொழுது வாய் திறந்தாரா?
  • கோவில் புனித தன்மையை மறைமுகமாக கெடுத்து வரும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் குறித்து வாய் திறந்தாரா?

திமுக, திக, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகளின், தூண்டுதல் பெயரில் மணியரசன். செயல்படுகிறாரோ? என்னும் ஐயம் தமிழக மக்களிடையே தற்பொழுது எழுந்து உள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் தமிழர் ஆன்மீகத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறும் இவர். தமிழ் பெண்களை இழிவுப்படுத்தியுள்ள, ஈ.வெ.ரா.வின் கொள்கைகளை எதிர்த்து ஆர்பாட்டமோ, போராட்டமோ, செய்ய முன்வருவாரா?

கோவை ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று கூறும் மணியரசன். ஈ.வெ.ரா.,வின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று கூற முன்வருவாரா? பஞ்சமி நிலம், மூலப்பத்திரம், குறித்து பேச முன்வருவாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Share it if you like it