தி.மு.க கூட்டணியில் தற்பொழுது உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை….
- எந்த பக்கம் பம்பரம் சுழலும் என்பது இன்று வரை மர்மமாக இருப்பது.
- அதிக சீட்டு கிடைக்கும் இடத்தில் பாய சிறுத்தை தயாராக இருப்பது..
- தி.மு.க-வை ’கை’ கழுவ ’கை சின்னம்’ கவனம் செலுத்தி கொண்டு இருப்பது..
- எங்கே குலுக்கினால் அதிக சீட்டு கிடைக்கும் என்று ஒரு கட்சி தீவிர முயற்சி செய்து கொண்டே இருப்பது..
- ஸ்டாலினுக்கு எதிராக கே.டி பிரதர்ஸ் படு பிஸியாக இருப்பது…
தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளின் கூத்தும்.. ரத்த உறவுகளின் சூழ்ச்சியும் ஸ்டாலினுக்கு எதிராக இன்று வரை செயல்பட்டு கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே..
தி.மு.க-வில் கே.டி. பிரதர்ஸின் ஆதிக்கத்தை முற்றிலும் அழித்து.. தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்காக ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவர்கள்.. சன் குழுமத்திற்கு எதிராக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்திலை களத்தில் இறக்கியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்…
சேற்றில்/ஆற்றில் கால்
சன் டிவி பெரிய வணிகசாம்ராஜ்யமாக இருக்கலாம்
ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை
அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது
திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் pic.twitter.com/Q0iAPvuP9W
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 30, 2020
'எங்களுக்கு தொழில் தான் முதல்.
அது தான் முக்கியம்.
திமுகவிற்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் என்றும் இருக்காது
திமுக விடம் எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை,'
என்று வெளிப்பயடையாக அவர்கள் அறிவித்து விட்டு
இது போல் விளம்பரங்களை
அவர்கள் ஒளிபரப்பட்டும். https://t.co/o67FfZNwMW— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 31, 2020
தினகரன்@dinakaranonline
தமிழ்முரசு
மாலை முரசு
சன் செய்திகள்@sunnewstamilஇனி என்னை சார்ந்த செய்தி வெளியிட வேண்டாம் என
அவர்கள் நிருபர்களுக்கு அந்த நிறுவனம் கட்டளை பிறப்பித்துள்ளதுசமூக வலைதளம் முக்கியத்துவம் வாய்ந்த இக்காலத்தில் சீப்பு மறைத்து வைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று🙏
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) January 4, 2021