ம.தி.மு.க., கட்சியின் அடுத்த தலைவராக, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோவின் மகன் துரை.வையாபுரி தேர்வு ஆகியுள்ளார். ‘இது, தொண்டர்களின் விருப்பப்படி, என் விருப்பம் மீறி நடந்தது’ என வைகோ, ‘கூறியுள்ளார். இதே கதையை தானே, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியும் சொன்னார். தன் மகன் ஸ்டாலினை, தி.மு.க.,வில் வளர்த்தார். அப்போது அதை எதிர்த்ததால் தானே தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். இப்போது அதே தவறை வைகோ செய்யலாமா… வாரிசு அரசியலை நியாயப்படுத்தலாமா?
தன் மகன் துரை.வையாபுரியுடன் சென்று, மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியலை பின்பற்றும், தி.மு.க.,வின் இளைஞரணி செயலர் உதயநிதியை சந்தித்து, மாலை அணிவித்து வாழ்த்தும் பெறுகிறார் வைகோ!. தாத்தாவை எதிர்த்த தலைவர், அவரது மகனின் வெற்றிக்காக மேடைகளில் முழங்கி, இன்று பேரனுக்கும் அடிபணிந்து வாழ்த்து பெற, காத்திருக்கிறாரே… ம.தி.மு.க., தொண்டர்களுக்கும், தீக்குளித்து மாண்டோருக்கும் இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!
இவ்வாறு சமூக வலைதளங்களில் கருத்து வைரலாகி இன்று ம.தி.மு.க. விவாத பொருளாகி வருகிறது.