சீமான் Vs வைகோ… லக லக லகலகலக!

சீமான் Vs வைகோ… லக லக லகலகலக!

Share it if you like it

பேனா சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சீமானுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடலுக்குள் ரூ. 80 கோடி செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக ’பேனா நினைவு சின்னத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது, தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் சென்னை திருவல்லிகேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில், மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் என ஏராளமாவனர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் உரையாற்றும் போது, பள்ளிகளை சீரமைக்க நிதியில்லை. பேனா சின்னத்தை அமைக்க மட்டும் எப்படி? நிதி வந்தது. மக்களின் வரிப்பணத்தில் பேனா சின்னம் அமைக்க கூடாது. உங்களது சொந்த பணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மீறி அமைத்தால் நான் ஆட்சிக்கு வந்த உடன் அதனை உடைப்பேன் என ஆவேசமாக கூறியிருந்தார். சீமானின் இந்த கருத்து ஆளும் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, சீமானை கழக கண்மணிகள், முன்னோடிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, சீமான் ஆவேசமாக பேசியதை குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டனர். இதற்கு, அமைச்சர் சேகர் பாபு, அவருக்கு மட்டும்தான் கை இருக்கிறதா? எங்கள் கை பூ பறிக்கவா உள்ளது என பதிலடி கொடுத்து இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார் ;

நர்மதா நதியில் அவ்வளவு உயரமான சிலை பட்டேலுக்கு எப்படி வைத்தார்கள்? அவருக்கு யாராவது எதிர்ப்புத் தெரிவித்தார்களா? கருணாநிதி பேனா முனை என்பது வரலாற்றை தீட்டியது; அதற்கு எதிர்ப்பு என்பது பொறாமையும், ஆத்திரத்தாலும், எரிச்சலாலும் வரக்கூடியது, அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியல் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Image

Share it if you like it