தி.மு.க-விற்கு நிதி தேவைப்படும் பொழுது மருத்துவக் கல்லூரி நடத்துபவர்களிடம் எப்படி? நிதி உதவி பெறுவோம் வைரலாகும்  தி.மு.க முன்னாள் அமைச்சரின் காணொளி…!

தி.மு.க-விற்கு நிதி தேவைப்படும் பொழுது மருத்துவக் கல்லூரி நடத்துபவர்களிடம் எப்படி? நிதி உதவி பெறுவோம் வைரலாகும் தி.மு.க முன்னாள் அமைச்சரின் காணொளி…!

Share it if you like it

ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், பணம் படைத்தவர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் விதமாக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் வழங்கிய ஆலோசனைக்கு பின்பே மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது.

ஜனாதிபதியின் பேரனாரக இருந்தாலும் கூட நீட் தேர்வினை எழுதினால் மட்டுமே, மருத்துவ கல்லூரியில் இடம் பெற முடியும் என்பது நிதர்சனம். இந்தியாவில் பின் தங்கிய மாநிலங்கள் கூட நீட் தேர்விற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவிக்காத பொழுது கூட கல்வியில் மிகச் சிறந்த மாநிலம் தமிழகம் என்று கூறும் நாம் தான் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறோம் என்பது கசப்பான உண்மை.

நீட் தேர்வு அனைத்து மாணவர்களும் மருத்துவராக கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறது. குறிப்பாக “ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பலன் அளிப்பதாக இருக்கின்றது”. மிகப்பெரிய மருத்துவ கல்லூரி வைத்து இருப்பவர்களின் பிள்ளைகளாக இருந்தாலும் கூட, அது “யாராக இருந்தாலும் சரி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ சீட் கிடைக்கும் என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கி விட்டது என்பது திண்ணம். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மருத்துவ கல்லூரி மாபியாக்கள் தங்கள் கடும் எதிர்ப்பினை அரசியல்வாதிகள் மூலம் நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு பாதிப்பை உருவாக்கி வருகிறது என்கிற பொய் பிம்பத்தை மக்கள் மீது திணிக்க முயன்று வருகின்றனர் என்பது அனைவரின் கருத்தாக உள்ள நிலையில். தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்கள் மருத்துவ கல்லூரி நடத்தும் அதிபர்களிடம் எப்படி? நாங்கள் நிதி பெறுவோம் என்று அவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Image


Share it if you like it