பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட இருளர் சமுதாயத்தை சேர்ந்த மாசியை நமது மீடியான் குழு நேரில் சந்தித்து நேர்காணல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பத்மஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளை வழங்கின. இந்த, நடைமுறை அக்கட்சி ஆட்சியில் இருந்த வரை தொடர்ந்தன. கடந்த 2014 – ஆம் ஆண்டுக்கு பிறகு இம்முறையை முற்றிலும் ஒழித்து கட்டியவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டுக்கு பெருமை சேர்த்த ஏழை எளியவர்களை இனம் கண்டு அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கும் உரிமையை பெற்ற தந்த கட்சி பா.ஜ.க. என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
அந்த வகையில் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், நமது மீடியான் குழு விருது அறிவிக்கப்பட்ட இருவரையும் நேரில் சந்தித்து பேட்டி கண்டன.
மேலும், விவரங்களுக்கு அதன் யூ டியூப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.