சிவலிங்கத்தை வழிபட்ட முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முக்தியின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காஷ்மீர் நிம்மதியற்ற மாநிலமாக இருந்து வந்தது. இதனிடையே, 2014- ஆம் ஆண்டு பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றார். இதையடுத்து, பல்வேறு மாற்றங்கள் காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்தன. அந்தவகையில், 370 -வது சட்ட பிரிவு நீக்கம், ஆப்ரேஷன் மா உள்ளிட்ட பல்வேறு அதிரடியான சம்பவங்களை மோடி அரசு மேற்கொண்டன. மேலும், தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் பணியை இந்திய ராணுவம் தொடர்ந்து செய்து வருகின்றன.
இதன்காரணமாக, பல காஷ்மீர் இளைஞர்கள் அமைதி வழிக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர் மெகபூபா முக்தி. இவர், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர். இவர்தான், அம்மாநிலத்தில் உள்ள சிவன் ஆலயம் ஒன்றிற்கு அண்மையில் சென்று இருக்கிறார். அந்தவகையில், சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் சாமி கும்பிட்டு இருக்கிறார்.
இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அன்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்டவர் இன்று சிவனிடம் பக்தி ஏற்பட்டு மண்டியிட்டுள்ளார். இதற்கு, எல்லாம் காரணம் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.