மலையாள திரையுலகில் இந்து கதாநாயகனா? கொதிக்கும் மைனாரிட்டி மாஃபியாக்கள்

மலையாள திரையுலகில் இந்து கதாநாயகனா? கொதிக்கும் மைனாரிட்டி மாஃபியாக்கள்

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவாபாரதி செய்யும் சேவைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதால், எதிர் முகாம்களின் விமர்சனங்களுக்கு ஆளானாலும், அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி வெற்றிநடை போடுகிறது மேப்படியான் திரைப்படம்.

மலையாள திரைப்பட உலகின் அறிமுக தயாரிப்பாளரான உன்னி முகுந்தன் தயாரிப்பில், விஷ்ணு மோகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மேப்படியான். தயாரிப்பாளரான உன்னி முகுந்தனே இத்திரைப்படத்தின் கதாநாயகன். பொதுவாகவே, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பு, இந்த பாரத தேசத்துக்கும், நாட்டு மக்களுக்கும் ஏராளமான சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக, ஜாதி, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஒரே அமைப்பு. இந்த தேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அமைப்பு என்றால் மிகையாகாது.

ஆனால், மாற்று மத அடிப்படை வாதிகளும், கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சியினரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்பு என்கிற ரீதியில், அம்மதத்தினரிடையே சித்தரித்து வருகின்றனர். இதை பொய்யாக்கும் வகையில் மேப்படியான் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவாபாரதி இந்த தேசத்துக்கும், நாட்டு மக்களுக்கும் செய்து வரும் சேவைகளை, இந்த உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். இது பிற மத அடிப்படைவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகள் மத்தியில் பொறாமையையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. உடனே, மேப்படியான் திரைப்படத்துக்கு எதிராகவும், உன்னி முகுந்தனுக்கு எதிராகவும் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லத் தொடங்கினார்கள்.

காரணம், ஒரு காலத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மலையாள திரைப்பட உலகம், தற்போது கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால், மலையாள திரைப்பட உலகில் பிரபலமாக வலம் வரும் இந்து மதத்தைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது வீண் பழி சுமத்தி, திரையுலகை விட்டு விலக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

அதேபோல, தற்போது உன்னி முகுந்தனுக்கு எதிராகவும் தங்களது புளுகு மூட்டையை கட்டவிழ்த்து விட்டார்கள். ஆனால், இது திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் சுத்தமாக எடுபடவே இல்லை. காரணம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உண்மையிலேயே மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஒரு அமைப்பு என்பதை அனைத்து தரப்பினரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆகவே, கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டுமே என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதனால், கூனிக்குறுகி நிற்கிறது எதிர் கும்பல்.


Share it if you like it

2 thoughts on “மலையாள திரையுலகில் இந்து கதாநாயகனா? கொதிக்கும் மைனாரிட்டி மாஃபியாக்கள்

Comments are closed.