மகளிர் உரிமைதொகை திட்டத்தில் வசதி பெற்றவர்கள் பயன் பெற்றிருந்தால் தாமாக முன்வந்து விலகிக் கொள்ள வேண்டும் அமைச்சர் கீதா ஜீவன்

மகளிர் உரிமைதொகை திட்டத்தில் வசதி பெற்றவர்கள் பயன் பெற்றிருந்தால் தாமாக முன்வந்து விலகிக் கொள்ள வேண்டும் அமைச்சர் கீதா ஜீவன்

Share it if you like it

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான போது திமுக வெற்றி பெற்ற ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருக்கும் குடும்ப அட்டை அடிப்படையில் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்டது. பெருவாரியான பெண்களின் வாக்குகளை பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு நிதிநிலைமை சரியில்லை என்று இந்த திட்டம் சில வாக்காலம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் எதிர் கட்சிகளின் கேள்வி பல்வேறு தரப்பில் எழுந்த அழுத்தங்கள் விமர்சனங்கள் காரணமாக இந்த ஆண்டு அண்ணாவின் பிறந்தநாளில் இருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதற்கு தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த மகளிர் தொகை உதவித் தொகை அல்ல உரிமைத்தொகை என்று பெருமிதம் பேசிய முதல்வர் பயனாளர்கள் பட்டியலுக்கான தகுதிகள் விதிகளை நிர்ணயித்து ஒரு பெரும் பட்டியலை வெளியிட்டார். அதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு பயனாளர்கள் பரிசீலித்து தேர்வு செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகி அதன் காரணமாகவே பல மாதங்கள் இந்த திட்டம் கிடப்பிலும் இருந்தது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்ச்சியான அரசியல் அழுத்தங்கள் மக்களுக்கு இருக்கும் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியை நீக்கும் விதமாக ஒரு வழியாக இந்த மகளிர் உரிமைத்தொகை சில வாரங்கள் முன்பு அமலுக்கு வந்தது.

மாநிலம் முழுவதிலிருந்து மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்தவர்களில் இருந்து சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு பணியில் இருப்பவர்கள் அல்லது அரசு பணியாளர்களின் வீட்டில் இருக்கும் பெண்கள் என்று கண்டறியப்பட்டு அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. அடையாளம் காணப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களே மூன்று லட்சம் இருக்கும் எனில் அடையாளம் காணப்பட முடியாமல் அல்லது நிராகரிக்கப்பட முடியாத அரசியல் நெருக்கடி காரணமாக இத்திட்டத்தில் பயன் பெற்ற வசதியானவர்களின் எண்ணிக்கை எத்தனை லட்சம் இருக்கும்? என்பதை நம்மால் யூகிக்க முடியும். அப்போதே மாநில அரசின் மீது இத்தனை மாதங்களும் விண்ணப்பங்கள் பயனாளர்கள் பட்டியல் பரிசீலனை இறுதி பட்டியில் என்று தானே காலம் கடத்தினீர்கள்? அப்போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? என்ற கேள்விகள் விமர்சனங்கள் எழுந்தது.

பயனாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான பண வழங்கல் முன்னோட்டமாக அமாவாசை நன்னாளில் முதலில் ஒவ்வொரு கணக்கிலும் ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மறுநாள் செப்டம்பர் 15 திமுகவின் முப்பெரும் விழா நாளில் அனைவரது கணக்கிலும் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. இதில் முதல் நாள் வரவு வைக்கப்பட்ட ஒரு ரூபாய் விசயத்தில் பல்வேறு குழப்பங்கள் குளறுபடிகள் நடந்ததாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்தது . ஆனால் அவை யாவும் எழுந்த வேகத்திலேயே அடங்கியது.

பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு பயனாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு யாரெல்லாம் பணம் பெற்றார்கள் ? யார் விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டது? என்ற தகவல்கள் வெளியான போது ஆங்காங்கே அதிருப்தியும் ஆட்சியாளர்களுக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தது. காரணம் பல்வேறு இடங்களில் உண்மையில் ஏழ்மையில் வறுமையின் பிடியில் இருந்த பலர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது .ஆனால் நல்ல வசதி வாய்ப்பு அரசு வேலை உள்ளிட்ட சுகபோகமான வாழ்வில் இருப்பவர்களுக்கு கூட எந்த நெருக்கடியும் இல்லாமல் மகளிர் உரிமைத்தொகை கிடைத்திருக்கிறது‌ இதன் பின்னணியில் உள்ளூர் அரசியல் நெருக்கடியாக ஆளும் கட்சியான திமுக நிர்வாகிகளின் கைவரிசை இருக்கிறது என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

பல்வேறு கருத்துக்கணிப்புகள் பொதுவெளிகளில் சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்து பதிவு என்ற வகையில் தமிழகம் முழுவதிலும் பெண்கள் மத்தியில் தமிழக அரசுக்கு பெருத்த அதிருப்தி எழுந்தது. காரணம் ஒட்டுமொத்த பெண்களும் தேர்தலுக்கு முன்பு வெற்றி பெற்று வந்தால் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் என்று சொல்லி தான் வாக்கு கேட்டீர்கள். அப்போது நிதிநிலைமை பற்றிய அறிவு உங்களுக்கு இல்லையா ? வெற்றி பெற்று வந்தவுடன் தகுதியானவர்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் என்று சொன்னீர்கள் .சரி நிதிநிலை காரணமாக அது ஏழ்மையில் இருப்பவர்களுக்கு மட்டும் என்று அமல்படுத்தி இருந்தால் கூட ஒரு வகையில் நியாயமாக இருந்திருக்கும். ஆனால் நிதி நிலையை காரணம் காட்டி தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை கிடைக்கும் என்று சொல்லிவிட்டு உங்களின் கட்சிக்காரர்கள் கூட்டணி கட்சிக்காரர்கள் அல்லது உங்களின் ஆதரவாளர்கள் என்ற காரணத்திற்காக பல்வேறு இடங்களில் பெரும் வசதியும் ஆடம்பரமும் இருக்கும் குடும்பங்களில் இருக்கும் பெண்களுக்கு உரிமை தொகை கிடைக்கிறது. ஆனால் தினக்கூலிகளாக வறுமையின் பிடியில் இருக்கும் பல பெண்களுக்கும் இந்த உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த மகளிர் உரிமைத்தொகை தகுதியாளர்கள் அடிப்படையில் மட்டுமே பயனாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும். தகுதியான பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியாகி அதற்குரிய விதிகள் பயனாளர்கள் பட்டியலுக்கான தகுதியை முதல்வர் வெளியிட்ட போதே தமிழக பாஜக தலைவர் அதை காட்டமாக விமர்சித்தார் . நீங்கள் வைத்திருக்கும் தகுதியை வைத்து பார்த்தால் தமிழகத்தில் இருக்கும் ஐந்து சதவீதம் பெண்கள் கூட இந்த மகளிர் உரிமைத் தொகையை அனுபவிக்க முடியாது. இதற்கு பதிலாக திமுகவின் அடையாள அட்டை இருந்தால் போதும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்று ஒரே ஒரு விதியை வைத்திருக்கலாம் அல்லது இந்த எல்லா தகுதியும் இருந்தால் கூட திமுக அடையாள அட்டையும் இருந்தால்தான் உரிமைத்தொகை பெற முடியும் என்று கூட நீங்கள் நிர்ணயித்திருக்கலாமே என்று கடும் கோபத்துடன் தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பினார் . அன்று அவர் எழுப்பிய கேள்வியும் அதன் பின்னிருந்த ஆதங்கமும் திமுகவின் அரசால் உண்மையாக்கப் பட்டிருக்கிறது. பல இடங்களில் உண்மையில் இந்த தொகை போய் சேர வேண்டியவர்களுக்கு மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்ற காரணமாக பலருக்கும் மிக எளிதாக இந்த உரிமை தொகை கிடைத்திருக்கிறது.

இந்த சர்ச்சைகள் தீரும் முன்பே தமிழகத்தில் மகளிர் நலத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் திமுகவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகையில் பயன் பெற்றவர்கள் வசதியானவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தாமாக முன்வந்து இந்தத் திட்டத்திலிருந்து தங்களை வெளியேற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் திமுக அரசால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் பயனாளர் பட்டியல்களுக்கான விதியையும் மீறி வசதியும் ஆடம்பரமும் இருக்கும் பலரும் இந்தத் திட்டத்தில் பயன் பெற்றிருப்பது அம்பலமாகிறது .அது ஆதாரப்பூர்வமாக மாநில அரசுக்கு சென்றிருப்பதும் வெளிச்சம் ஆகிறது.

ஒரு மாநில அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் மகளிர் உரிமைத் தொகைக்கு இத்தனை மாதங்களாக பயனாளர் பட்டியலை இறுதி செய்யும்போது அதை கண்காணிக்காமல் அல்லது கட்டுப்படுத்தாமலா? இருந்திருப்பார் அப்போதே வசதி வாய்ப்புகள் இருப்பவர்களை நிராகரிங்கள் என்று சொல்லி இருந்தால் இன்று இந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய தேவை இருந்திருக்காது. ஒருவேளை பயனாளர்களுக்கு பண பட்டு பாடம் செய்த பிறகு அவர்களின் பின்புலம் தெரியவரும் பட்சத்தில் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் அரசாணை இட்டு அவர்களுக்கான உரிமை தொகையை ரத்து செய்து விட்டு போக முடியும். இரண்டையுமே செய்யாமல் வசதியானவர்கள் பயனாளர்களாக இருந்தால் தாமாக முன்வந்து இந்தத் திட்டத்திலிருந்து தங்களை வெளியேற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இதன் மூலம் மாநில அரசின் மகளிர் உரிமைத் தொகையில் பயனாளர்கள் பட்டியலுக்காக அவர்கள் வெளியிட்ட தகுதி திறன் மீறி பலரும் பயனாளர்களாக இருப்பதும் அது ஆளும் கட்சி செல்வாக்கு அந்தஸ்து உள்ளிட்ட அவற்றின் காரணமாக பெருமளவில் துஷ்பிரயோகம் நடந்திருப்பதும் தெரிய வருகிறது. இதை கண்டறிந்து அவர்களின் பயனாளர் அந்தஸ்தை ரத்து செய்யும் பட்சத்தில் அது உட்கட்சியில் பெரும் நெருக்கடிகளை உள்ளூர் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் தாமாக முன்வந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் முன் வைக்கிறார் என்பதும் தெளிவாகிறது. அப்படியானால் இங்கு மாநில அரசின் எந்த ஒரு நலத்திட்டமும் சட்டத்தின் அடிப்படையிலும் விதிகளின் அடிப்படையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை . ஆளும் கட்சிக்காரர்களின் அதிகாரம் செல்வாக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் நிர்வாகிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போகும் வகையில் முழுக்க முழுக்க திமுகவின் அரசியலையும் அதன் வாக்கு வங்கியை தக்க வைக்கும் வகையிலான ஒரு கருவியாக மட்டுமே மாநில அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுகிறது என்பது நிரூபணம் ஆகிறது.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எதிர்க்கட்சிகள் மற்றும் நடுநிலையாளர்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் இது முழுக்க முழுக்க ஆளுங்கட்சிக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதைத்தான் அவர்கள் மறைமுகமாக பயனா ளர்கள் பட்டியல்களுக்கான தகுதி தரம் நிர்ணயம் விதிகள் என்று பூ சுற்றுகிறார்கள் என்று வெளிப்படையாகவே பேசினார்கள். அன்று அவர்கள் பேசியது உண்மையாகி இருக்கிறது .இது திமுகவின் கட்சி அரசியலில் வழக்கமான ஒரு விஷயம் தான்.அதை சரி செய்ய முடியாமல் அமைச்சர் வந்து தாமாக முன்வந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைப்பதும் வேதனை. அப்படியானால் இத்தனை மாதம் மாநில வருவாய் துறை உள்ளாட்சித் துறை ஊழியர்களின் நேரமும் உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் பலமுறை ஆய்வு பரிசீலனை செய்துதான் பயனாளர்களை தேர்வு செய்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக மாநில அரசின் அரசு எந்திரத்தின் நேரமும் உழைப்பும் வீணாக்கி இருக்கிறார்கள் . அது அத்தனையும் கடந்து கூட வசதியானவர்கள் பலன் பெற்றது தெரிந்தும் தங்களின் அரசியல் நலனுக்காக அவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க மனம் இல்லாமல் தாங்களாக விலகிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். இதை செய்வதற்கு ஒரு அரசும் ஆட்சியாளர்களும் தேவைதானா ? .

கடந்த காலங்களில் பிரதமர் மோடி சமையல் எரிவாயு மீதான மானியத்தை வசதி உள்ளவர்கள் சுய விருப்பத்தின் பெயரில் விட்டுக் கொடுக்க முன் வாருங்கள். நீங்கள் விட்டுக் கொடுக்கும் சிறு தொகை பல ஏழைகளின் வீடுகளில் இலவச எரிவாயு இணைப்பு கொடுத்து அதன் மூலம் அவர்களின் வீடுகளில் எரிவாயு இணைப்பு பெறவும் முடியும். உங்களின் இந்த சிறிய பங்களிப்பும் மனமுவந்த விட்டுக் கொடுப்பும் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பல கோடி ஏழைப் பெண்களின் பணிபளுவை மன உளைச்சலை குறைக்கும் ஆரோக்கியம் பாதுகாக்கும். அதன் காரணமாக அவர்களும் பாதுகாப்பான இலகுவான வாழ்க்கைக்கு மாற முடியும் . இலவச எரிவாயு இணைப்பை மத்திய அரசும் பெரும் பணசுமை இல்லாமல் வழங்க முடியும் என்று கோரிக்கை விடுத்த போது மோடிக்கு நிர்வாகம் செய்ய திறமை இல்லை. மக்களிடம் விட்டுக் கொடுங்கள் என்று கேட்கிறார். நிதி நிலைமையை வைத்து நிர்வாகம் செய்ய திறமை இல்லாவிட்டால் ஆட்சியை துறந்து விட்டு போகலாம். நாங்கள் அனைத்தையும் சாதித்து காட்டுவோம் என்று முழங்கியவர்கள். ஆனால் இன்று அவர்களின் கைகளில் அதிகாரமும் அவர்களின் ஆட்சியில் நலத்திட்டங்கள் என்று வரும்போது கட்சிக்கும் கேடு வராமல் ஆட்சிக்கும் பங்கம் வராமல் வாக்கு வாங்கி அரசியலை மட்டுமே பிரதானமாக வைத்து அதே மக்களிடம் தாமாக முன்வந்து விட்டுக்கொடுங்கள். திட்டத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.


Share it if you like it