பொன்முடிக்கு எதிரான தீர்மானம்: கிராம மக்கள் அதிரடி!

பொன்முடிக்கு எதிரான தீர்மானம்: கிராம மக்கள் அதிரடி!

Share it if you like it

தமிழக பெண்களை இழிவுப்படுத்திய பொன்முடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிட முன்னேற்ற கழக்கத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார். கட்சியின் கட்டுப்பாடினை மீறினால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முன்பு ஒருமுறை ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், இவர் பொறுப்பு ஏற்ற நாள் முதல் இன்று வரை கட்சியின் மூத்த தலைவர்களில் தொடங்கி, எம்.பி. எம்.எல்.ஏ. வரை ஸ்டாலினை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் மணம் பூண்டியில் நியாய விலை கடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, ஆண் பெண் சமம். இந்த, ஊரில் ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஒரு பெண். இவர், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த, ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார். அதுதான், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என குறிப்பிட்டு இருந்தார். நீங்க ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்மணி தானே என்று அமைச்சர் பொன்முடி பேசிய கருத்து பெரும் சர்ச்சையாக மாறியிருந்தது.

இந்த நிலையில், சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதி, கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா விளக்கப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, உங்களுக்கு எல்லாம் ரூ. 4,000 ஆயிரம் கொடுத்தது யாரு வாய் திறந்து சொல்லுங்க. இப்ப, நீங்க எப்படி பஸ்ஸில் வருகிறீர்கள். இங்கிருந்து, கோயம்பேடு போனாலும் எங்கே? போனாலும் ஓசீ பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என குறிப்பிட்டு இருந்தார். அமைச்சர் பொன்முடியின் கருத்து தமிழக பெண்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள காங்கியனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டர். அப்போது, தமிழக பெண்களை ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் என்று இழிவுபடுத்திய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, தீர்மானம் கொண்டு வரவேண்டும் என அவ்வூர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து இருக்கின்றனர். இந்த காணொளி தான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it