150 வருட கம்பெனியான லீமென் திவால் ஆகும்போது அங்குதான் நான் இருந்தேன் என நிதியமைச்சர் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. ஆட்சி தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் வரிப்பணம் பல வகையிலும் வீணடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில், உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2,00,000-க்கும் மேல் கடன் இருப்பதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆண்டு வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து, 2,500 கோடியில் சென்னையில் பூங்கா. 100 கோடி-யில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம், எழுதாத பேனாவிற்கு 80 கோடி என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களின் கோவத்திற்கும், சாபத்திற்கும் நிதியமைச்சர் உள்ளாகி இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் தான், behind woods யூ டியூப் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது ; எந்த ஒரு மாற்றத்தை கொண்டு வந்தாலும், பயங்கரமான எதிர்ப்பு எனக்கு வருகிறது. நீங்களே அதனை யோசித்து கொள்ளுங்கள். அந்த, எதிர்ப்பை எல்லாம் தாண்டிதான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. இங்கு, எதுவுமே நிரந்தரம் அல்ல. வெற்றி, தோல்வி வரும் போகும்.
அமெரிக்க இரட்டை கோபுரம், இடிந்து விழுந்த போது பேஸ்மெண்டில் இருந்தவன் நான். செப்.,-15 2008 – ஆம் ஆண்டு 150 வருடம் செழுமையாக இருந்த கம்பெனி லீமென் பிரதர்ஸ். அந்த கம்பெனி திவாலான போது அங்கு இருந்தவன் நான். 400 பேருக்கு தலைவராக இருந்து இருக்கிறேன். அங்கிருந்த, பிரச்சனைகளை சமாளிக்க முடிந்த என்னால் இதனையும் சமாளிக்க முடியும் என கூறியிருக்கிறார்.
150 வருடம் செழுமையாக இருந்த கம்பெனியை திவாலாக்கிய நிதியமைச்சர் 380 கோடி கொடுத்து ஆட்சிக்கு வந்திருக்கும் விடியல் ஆட்சியை திவாலாக்க முடியுமா? என நெட்டிசன்கள் சவால் விடுத்து வருகின்றனர்.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தமிழக நிதியமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவர், கோவகார மனிதர் என்று சொல்லப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவரது பேச்சுகள் இருந்து வருகின்றன. நான் யார் தெரியுமா? எனது தாத்தா யார் தெரியுமா? எனது படிப்பு என்ன தெரியுமா? என் குடும்ப பரம்பரை என்னவென்று தெரியுமா? என பத்திரிகையாளர்களிடம் கோவமாக பேசியிருக்கும் காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.
எதற்கெடுத்தாலும், கோவமடையும் மனிதரை நிதியமைச்சராக ஏன்? நியமனம் செய்ய வேண்டும் என்பது தி.மு.க.வில் இருப்பவர்களின் கேள்வியாக உள்ளது. எனினும், அதுகுறித்து எல்லாம் கவலைப்படாமல் நிதியமைச்சர் தனது எண்ணம் போல பேசுவதும், நடந்து கொள்வதுமாக இருந்து வருகிறார்.