100 கோடி தடுப்பூசிகளை இந்தியர்களுக்கு செலுத்தி வரலாற்று சாதனை புரிந்த மத்திய அரசை அரசை விமர்சனம் செய்த அருணன்.
பா.ஜ.க தலைமையில் உள்ள மோடி அரசு 100 கோடி தடுப்பூசிகளை இந்திய மக்களுக்கு செலுத்தி சாதனை புரிந்தது மட்டுமில்லாமல் சிறிய நாடுகள், ஏழை நாடுகள், அண்டை நாடுகள், வல்லரசு நாடுகள், மற்றும் சில நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி மனித இனத்திற்கே பெரும் உதவி புரிந்து உலக நாடுகள் மத்தியில் இந்தியா நற்பெயரை பெற்று உள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
இதனை பொறுத்து கொள்ள முடியாத கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தி.மு.க தி.க, வி.சி.க போலி ஊடகங்கள், போலி நெறியாளர்கள், என பலர் பாரதப் பிரதமருக்கு கிடைத்த பெருமை மட்டம் தட்டும் நோக்கில் தொடர்ந்து தவறான கருத்தினை பதிவு செய்து, விவாதம் என்னும் பெயரில் இந்த வரலாற்று சாதனை குறித்து மக்களுக்கு தவறான கருத்தினை பதிவு செய்வது என தொடர்ந்து வன்மத்துடன் பலர் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்பது கசப்பான உண்மை.
இந்நிலையில் கம்யூனிஸ்ட்சியின் தீவிர ஆதரவாளரும் சீமானின் அன்புக்கு உரியவருமான அருணன் அவர்கள் மோடி மீது உள்ள பொறாமையால், மத்திய அரசின் சிறப்பான சாதனையையும் 100 கோடி தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களின் நம்பிக்கையையும், அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் நோக்கில் தனது டுவிட்டரில் இவ்வாறு தனது அழுக்கு எண்ணத்தை பதிவு செய்து உள்ளார்.
நூறுகாேடி தடுப்பூசி பாேட்டுவிட்டதாக தனக்குத்தானே பெருமைபட்டுக் காெள்கிறார் மாேடி. ஆனால் ஒரு தடவை பாேட்டவர்கள் 51% என்றால் இரு தடவை பாேட்டவர்கள் 21% தான். இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் இந்தியாவில்தான் மிக அதிகம். (தி இந்து 24-10-21) டீசல் ரூ நூறு பற்றியும் பேசட்டுமே பிரதமர்!