மோடியின் ’மகள்கள் திட்டத்தை’ மூன்று ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வரும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்..!

மோடியின் ’மகள்கள் திட்டத்தை’ மூன்று ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வரும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்..!

Share it if you like it

தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி செய்யும் மத்திய அரசு.

‘தந்தையை இழந்த பெண் குழந்தைகளுடைய வாழ்வாதாரத்திற்காக மோடியின் மகள் என்கின்ற திட்டத்தின் வாயிலாக அடுத்த 5 வருடங்களுக்கு ( வருடம் தோறும் ) 10,000 அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இந்த திட்டம் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை திருமதி. வானதி சீனிவாசன் MLA அவர்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் சிறுமிக்கு பாரதப் பிரதமர் மோடி 5 வருடமாக ஸ்கூல் பீஸ் கட்டி வருவது குறித்து மீடியான் கடந்த ஆண்டு தனது இணையதள பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது அது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர் பக்கத்திலுள்ள கிராமம் பவித்ரமாணிக்கம், அந்த கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் தனது மகள் ரக்ஷிதாவை. திருவாரூர் கேந்திரிய வித்யாலயாவில் சேர்க்க வேண்டும் என்று தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரின் முயற்சிக்கு போதிய பலன் கிடைக்கவில்லை. இதனால் மனம் தளராத அவர் பாரதப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

குணசேகரன் துளியும் எதிர்பார்க்காத வகையில், பிரதமர் கோட்டாவிலேயே ரக்சிதாவுக்கு திருவாரூர் கேந்திரிய வித்யாலயாவில் சீட்டு உறுதி செய்யப்பட்டு பிரதமரிடம் இருந்து அவருக்கு கடிதம் வந்துள்ளது.

கேந்திரிய வித்யாலயாவில் குழந்தையை சேர்த்த ஒரு வருடத்திற்கு பின். குணசேகரன் பிரதமர் மோடிக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.. தான் மிகவும் ஏழ்மை  உள்ளேன் என்னால் குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்று தனது இயலாமையை வெளிப்படுத்தி கடிதம் எழுதி இருந்தார்.

அதற்கும் பிரதமரிடமிருந்து உடனடியாக பதில் கிடைத்திருக்கிறது அந்த வருடத்தில் இருந்து இன்று வரை பிரதமர் அலுவலகமே ரக்ஷிதாவுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருகிறார். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கடிதம் எழுதிய சாதாரண ஒரு மனிதனின், உணர்வையும் மதித்து பதில் கடிதம் எழுதிய பிரதமரின் செயலை தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு முன்கள ஊடகங்களும் ஒரு பெட்டி செய்தியாக கூட வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it