தி.மு.க ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்து பா.ஜ.க செய்த சாதனைகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது அல்லது முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் கொண்டு வந்த திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவது என விடியல் அரசு தொடர்ந்து சாதனைக்கு மேல் சாதனையை இன்று வரை புரிந்து வருகிறது என்பதை அனைவரும் பார்த்து வருகின்றனர்.
தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் அண்மையில் முன்வந்தது. ரிலையன்ஸ் செய்த இச்சேவையில் ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க அரசு தனக்கு விளம்பரம் தேடிய சம்பவத்திற்கு இன்று வரை நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை திமுகவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசின் திட்டம் ஒன்றில் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் தி.முக அரசு முயன்று இருப்பதாக பிரபல அரசியல் விமர்சகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.
