இந்தியா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை அமைத்து கின்னஸ் சாதனை.
லடாக் பகுதியில் உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை அமைத்ததற்காக எல்லையோர சாலை அமைப்பிற்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் இன்றுவழங்கப்பட்டது.
கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 24 அடி உயரமான உம்லிங்லா பாஸ் சாலையை இந்திய ராணுவத்தின் எல்லையோர சாலை அமைப்பு சுமார் 4 மாதத்தில் கட்டியுள்ளது. சிசும்லேவிலிருந்து டெம்சோக் பகுதிக்கு செல்லும் 52 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைக்கு நடுவே உம்லிங்லா பாஸ் அமைந்துள்ளது.
இந்நிலையில், கின்னஸ் உலக சாதனைக்கான விருது இந்தியாவின் எல்லையோர சாலை அமைப்புக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்வு இணைய வழியாக இன்று நடைபெற்றது.
கின்னஸ் சாதனை நிகழ்வில் பங்கேற்ற எல்லையோர சாலை அமைப்பின் இயக்குநர் ராஜிவ் சவுத்ரி, சுமார் 50 சதவீதத்திற்கும் குறைவான ஆக்ஸிஜன் இருக்கக்கூடிய பகுதியில் சாலை அமைக்கும் போது ஏற்பட்ட சவால்கள், எவ்வாறு சாலை அமைக்கப்பட்டது என்பது குறித்து விவரித்தார்.
நன்றி தினமலர்..