உக்ரைனில் சிக்கியுள்ள சீன மாணவர் ஒருவர் பாரத பிரதமரிடம் உதவி கேட்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் முதல், வல்லரசு நாடுகள் வரை போரை உடனே நிறுத்துமாறு ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் இரு நாடுகளும் மேலும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைவரையும் மீட்டு விடுவோம், என்று இந்திய அரசு நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு மற்றும் ருமேனியாவின் எல்லைகளில் காத்து கொண்டு இருக்கும் இந்தியர்களை, மீட்கும் பணியை மத்திய அரசு விரைவுப்படுத்தியுள்ளது. விமானம் மற்றும் அதிநவீன போர் விமானங்கள் என அனைத்தையும் களத்தில் இறக்கியுள்ளது மோடி தலைமையிலான அரசு. அதுமட்டுமில்லாது, 4 மத்திய அமைச்சர்கள் இந்திய மாணவர்களை, மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும், பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி நாட்டை சேர்ந்த மாணவர்கள். இந்தியாவின் தேசிய கொடியை பயன்படுத்தி, உக்ரைனில் இருந்து தப்பிக்கும் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது. அந்த வகையில், எங்களையும் மீட்க பாரத பிரதமர் மோடி முன்வர வேண்டும் என சீன மாணவர் ஒருவர் உதவி கேட்டு உள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவிற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அருணன் போன்றவர்கள், சீன அரசின் இந்த அலட்சியம் குறித்து பேசாமல் மெளனம் காப்பது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.