பிரதமர் மோடி உட்பட 3 தலைவர்களை கொண்ட உலகளாவிய அமைதி ஆணையத்தை தொடங்க வேண்டும் என மெக்சிகோ அதிபர் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மெக்சிகோ அதிபராக இருப்பவர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர். இரு நாடுகளுக்கு மத்தியில் எழும் சிறிய பிரச்சினைகள் அது போராக மாறி விடுகிறது. இதன்மூலம், உலக நாடுகளுக்கு கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் வணிகத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, ஐந்தாண்டுகள் உலகில் எங்கும் போர் நடக்காத வண்ணம் சர்வதேச ஆணையம் ஒன்றினை அமைக்க வேண்டும். இந்த ஆணையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 3 உலகத் தலைவர்கள் கொண்ட குழுவை உடனே அமைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
போப் பிரான்சிஸ், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட இக்குழு போர் நிறுத்தம் தொடர்பாக திட்டத்தை வகுக்க வேண்டும். நீண்ட நாட்கள் நடைபெறும் போரின் மூலம் உலகப் பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்திக்கின்றன. மேலும், பணவீக்கம், கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் வறுமையின் காரணமாக பல அப்பாவி மனிதர்கள் தங்கள் உயிரை இழக்கும் சூழல் ஏற்படுகிறது.
ஆகவே, இந்த ஆணையத்தை அமைப்பதன் மூலம் ஐந்து வருடங்கள் பதற்றம் இல்லாமல், வன்முறை இல்லாமல், உலகம் அமைதியாக இருக்கும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் எனது கருத்தை ஏற்றுக் கொள்ளும் என தாம் நம்பவுதாக அவர் தெரிவித்துள்ளார்.