ஆர்டிக்கல் 370 35அ பிரிவை நீக்கியது ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி அரசியல் அமைப்புச் சட்டம் இருந்தது. சுதந்திரம் பெற்றப்பிறகு முதல் பாரத பிரதமராக இருந்த நேரு காஷ்மீருக்கு என்று சில சலுகைகளுடன் கூடிய ஒரு சட்டத்தை அமல்படுத்தினார். அதுதான் ஆர்டிக்கல் 370 ஆகும். இந்த சட்டத்தின் அடிப்படை அம்சம் என்னவென்றால் பாராளுமன்றத்தில் அமல்படுத்தப்படும் சட்டத்தினை காஷ்மீர் சட்டமன்றத்தில் அவர்களுக்கு ஏற்கக்கூடிய சட்டமாக இருந்தால் ஏற்பார்கள் இல்லையென்றால் அதனை நிராகரித்து விடுவார்கள். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு இந்த சட்டம் கிடையாது. அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் இருப்பார்கள். அன்றைய பாரத பிரதமர் காஷ்மீருக்கு ஆர்டிக்கல் 370 சட்டம் தற்காலிக சட்டமாகவே அமல்படுத்தினார். அன்றிலிருந்து காஷ்மீர் இந்த ஆர்டிக்கல் 370 சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்கி வந்தது. நேருக்கு பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சியோ அல்லது ஐக்கிய ஜனதா கட்சியோ இந்த சட்டத்தை நீக்க வில்லை. ஏனென்றால் அரசியல் லாபத்திற்காகவும் தங்களின் சுய லாபத்திற்காகவும் இந்த சட்டத்தை நீக்காமல் அதனை தொடரவிட்டார்கள்.
பிறகு பாரத பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி அவர்கள் காஷ்மீர் நம் இந்தியாவின் ஒரு மாநிலம் அப்படியிருக்க எல்லா மாநிலங்களுக்கும் என்ன சட்ட விதிமுறையோ அந்த சட்ட விதிமுறைத்தான் காஷ்மீருக்கும் இருக்கவேண்டும் என்று கூறி 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மிக துணிச்சலுடனும் தைரியத்துடனும் ஆர்டிக்கல் 370 35அ பிரிவு சட்டத்தை நீக்கி காஷ்மீரும் இந்தியாவில் ஒரு அங்கம். இந்திய அரசியல் சட்டம்தான் காஷ்மீருக்கு இருக்கவேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுத்தார். இது இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய சாதனை யாராலும் செய்ய முடியாத ஒன்றை துணிவுடன் செய்தவர் வரலாற்று சரித்திர நாயகர் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆவர்.