ஜெயலலிதாவை கொலை செய்தது மோடிதான் என்று கூறிய, தி.மு.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. ஆவேசம் காட்டி இருந்தது. இதையடுத்து, தான் அப்படிச் சொல்லவில்லை என்று தி.மு.க. எம்.எல்.ஏ. அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி அவர் உயிரிழந்து விட்டார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கும் நிலையில், இந்த வழக்கில் இன்னும் தீர்ப்புக் கூறப்படவில்லை.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு கட்சி மாறிய மார்க்கண்டேயன், ஜெயலலிதாவை கொலை செய்தது மோடிதான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது. இதையடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பிலிருந்து கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் கிளம்பியது. மேலும், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினரும் நடுநிலைவாதிகளும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில்தான், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன், தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீது, தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அந்த பேட்டியில், “எவ்வித ஆதாரமும் இல்லாமல் பிரதமர் மோடியை கொலைகாரர் என்று சொல்லி இருக்கிறார் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன். இவர் மீது தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மோடிதான் கொலை செய்தார் என்றால் ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் இவர் ஏன் சொல்லவில்லை.
மேலும், பிரதமரை எப்படி சொல்லலாம் என்று இவரை அழைத்து ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டாமா? என்ன நடக்குது இந்த நாட்டில்? ஸ்டாலின் அழைத்து மன்னிப்புக் கேட்கச் சொல்லக் கூடாதா அல்லது எம்.எல்.ஏ. மீது டி.ஜி.பி.தான் வழக்குப் பதிவு செய்ய மாட்டாரா?” என்று ஆவேசமாக கேட்டிருக்கிறார். இதனிடையே, நான் அவ்வாறு பேசவில்லை. சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றுதான் சொன்னேன். 1 மணி நேரம் நான் பேசியதில் வெறும் 20 செகண்டை மட்டும் எடுத்துப் போட்டிருக்கிறார்கள் என்று கூறி அந்தர்பல்டி அடித்திருக்கிறார் தொடைநடுங்கி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்.
மனசுல அந்த பயம் இருக்கட்டும்!