மோடியும் – முத்துராமலிங்கத் தேவரும் ஒன்னு பிரபல இயக்குனர் புகழாரம்!

மோடியும் – முத்துராமலிங்கத் தேவரும் ஒன்னு பிரபல இயக்குனர் புகழாரம்!

Share it if you like it

மோடியும் தேவரும் ஒன்னு என பிரபல இயக்குனர் பேரரசு கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் பேரரசு. பெரும்பாலும் தனது திரைப்படத்திற்கு தமிழில் பெயர் சூட்டுவதையே தனது கொள்கையாக கொண்டவர். இதுதவிர, தனது திரைப்படங்களுக்கு மாவட்டத்தின் பெயர்களை வைப்பதே இவரின் தனிசிறப்பு. அந்த வகையில், பல வெற்றி படங்களை தமிழக மக்களுக்கு வழங்கியவர். மேலும், தெய்வ பக்தியும், தேச பக்தியும் தனக்கு அதிகம் உண்டு என்பதை பல பேட்டிகளில் இவர் தெரிவித்துள்ளார்.

ஹிந்து கடவுளுக்கு எதிராகவும், தேசத்திற்கு எதிராகவும் யாரேனும் கருத்து தெரிவித்தால். உடனே, தனது பதிலடியை துணிச்சலுடன் தெரிவிக்க கூடியவர். அந்த வகையில், திருவள்ளுவர் கிறிஸ்தவராக இருந்து தான் திருக்குறளை எழுதினார், என வி.சி.க தலைவர் திருமாவளவன் அளந்து விட்ட மிகப்பெரிய கப்சா கதைக்கு அவர் கொடுத்த பதிலடி; திருவள்ளுவர் வாழ்ந்தது கி.மு. அதாவது கிருஸ்து பிறப்பதற்கு முன்பு. அப்பறம் எப்படி இந்த ஞானதஸ்தானம்? இவருக்கு என்ன பிரச்சனை? எதுக்கு இந்த கட்ட பஞ்சாயத்து??? என்று காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

அதேபோல, மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைக்கு, எதிராக நடிகர் சூர்யா அவரது தம்பி கார்த்தி மற்றும் போலி அரசியல்வாதிகள் தமிழக மக்களிடம் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதற்கு, பேரரசு கொடுத்த பதிலடி; தமிழ்நாட்டில் உள்ள மந்திரி, MLA, மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகள் இவர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு பிறகு எதிர்க்கட்டும் மும்மொழிக் கல்வியை! சிலரின் அரசியல் லாபத்திற்கு ஏழை மாணவர்களின் எதிர்காலம் காவு வாங்கப்படுகிறது என்று தெரிவித்து இருந்தார்.

தவறு செய்யும் நபர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக உடனுக்கு உடன் இவர் பதிலடி கொடுப்பதால் தி.மு.க, தி.க மற்றும் வி.சி.க.வை சேர்ந்தவர்கள் இவரை சங்கி என்று கிண்டல் செய்தனர். அதற்கு, இயக்குனர் அளித்த பதில்; ஊழல்வாதி! லஞ்சப்பேர்வழி! தமிழின துரோகி! கட்டப் பஞ்சாயத்து! பொய்யன், புளுகன், ஓசிச்சோறு, கொள்ள கோஷ்டி, துரோகக் கும்பல், மாஃபியா, வேடதாரி இந்த வார்த்தைகளை விட ‘சங்கி’ என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான். என்று தம்மை கிண்டல் செய்பவர்களை ‘நோஸ் கட்’ செய்து இருந்தார்.

இதுதவிர, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் இராவத் மரணத்தை கிண்டல் செய்தவர்களை மிக கடுமையாக கண்டித்து இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ; நம் நாட்டில் ஒரு கட்சிக்கு எதிரா கோடி பேர் இருக்கலாம்! மதத்திற்கு எதிரா கோடிப்பேர் இருக்கலாம்! மொழிக்கெதிரா, ஜாதிக்கு எதிரா பல கோடிப்பேர் இருக்கலாம் ஆனால் நம் இந்தியாவிற்கு எதிரா ஒரு பய இருக்கக் கூடாது! அவர்களை கண்டறிந்து இந்த நாட்டைவிட்டே துரத்துவது அரசின் கடமையாகும்! ஜெய்ஹிந்த்.. என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தான், பிரபல யூ டியூப் ஊடகமான i தமிழிற்கு அண்மையில் இவர் பேட்டியளித்துள்ளார். அப்பொழுது, நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு அம்பேத்காரும் – மோடியும் ஒன்னு என்று இளையராஜா ஒப்பிட்டார் அது அவரது கருத்து அவரின் உரிமை. இன்னொருவரிடமும் மோடியை இளையராஜா ஒப்பிட்டு இருக்க வேண்டும். அவர்தான், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என குறிப்பிட்டார்.


Share it if you like it