துர்கா தேவிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

துர்கா தேவிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Share it if you like it

மன் கீ பாத் நிகழ்ச்சியில் கரகாட்டக் கலைஞர் துர்கா தேவியின் திறமையை பாரதப் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதம் தோறும் வாரத்தின் கடைசி ஞாயிற்று கிழமை பாரதப் பிரதமர் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, தேசத்திற்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்தவர்களின் திறமையை உலகம் அறிய செய்வதே இதன் முக்கிய நோக்கம். அந்தவகையில், பல்வேறு சந்தர்பங்களில் தமிழகத்தை சேரந்தவர்களின் பெயர்களை பாரதப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அந்தவகையில், ( பிப்- 26 இன்று ) மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன்படி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா தேவியின் திறமையை பிரதமர் வெகுவாக பாராட்டினார். இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ;

கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளம் திறமையாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வழங்கப்படும் ‘உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவபுரஸ்கார்’ விருதை வென்ற சேலத்தைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞர் வி. துர்கா தேவிக்கு நமது மாண்புமிகு பிரதமர் இன்று வாழ்த்து தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it