காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் காஷ்மீர் கடந்து வந்த பாதை குறித்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை ஜம்மு காஷ்மீர் என்றாலே இந்தியர்கள் மட்டுமல்லாது உலக நாடுகளில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் குலை நடுங்கும். அந்தளவுக்கு கலவர பூமியாக இருந்து வந்தது. உள்நாட்டு சதி, அயல்நாட்டு சதி, பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரின் உறுதுணையால் தீவிரவாதிகளின் புகழிடமாக இருந்தது. இதனால், இங்கு சுற்றுலா செல்லவே பயணிகள் அச்சப்பட்டனர். எப்போது எங்கு குண்டு வெடிக்கும், எப்போது தாக்குதல் நடத்துவார்கள் என்பதை தெரியாது. ஆகவே, அது ஒரு சுற்றுலாப் பயணமாக இல்லாமல் திகில் பயணமாகவே இருக்கும். இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீர் செல்வதையே தவிர்த்தனர்.
இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தீவிரவாதிகளின் கொட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, அம்மாநிலம் மெல்ல மெல்ல அமைதி காற்றை சுவாசிக்க ஆரம்பித்தது. அந்த வகையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காஷ்மீரை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். வறுமை மற்றும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த காஷ்மீர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது காஷ்மீர் மாநிலத்தின் நிலை என்ன? பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் போது அம்மாநிலத்தின் நிலை என்ன? என்பதை மிக தெளிவாக விளக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.