காங்கிரஸ் செய்த ஊழல்களை காணொளியாக பா.ஜ.க. மேலிடம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம், என்ற தாரக மந்திரத்துடன் காங்கிரஸ் தனது ஆட்சி காலத்தை நடத்தி வந்தது. அதன்காரணமாக, இந்தியா என்ற பெயரை கூட வெளியில் சொல்ல முடியாத நிலை இந்தியர்களுக்கு ஏற்பட்டது. அந்த அவலநிலையை மாற்றிய பெருமை பாரதப் பிரதமர் மோடியையே சாரும். ஆம், கடந்த 2014 மற்றும் 2019 – ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை படுதோல்வி அடைய செய்தவர் மோடி.
இப்படிப்பட்ட சூழலில், எதிர்வரும் 2024- ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெரும் வண்ணம் பா.ஜ.க. தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தற்போது துவங்கியுள்ளது. அந்தவகையில், பா.ஜ.க.வின் சமூக வலைதள பக்கத்தில், “காங்கிரஸ் ஃபைல்ஸ் முதல் பாகம்’’ என்ற தலைப்பில் நேற்று காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.