கதிசக்தி திட்டம்: பா.ஜ.க. வெளியிட்ட காணொளி!

கதிசக்தி திட்டம்: பா.ஜ.க. வெளியிட்ட காணொளி!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியின் தலைமையில் பாரத தேசம் வேகமாக முன்னேறுகிறது என்பதை குறித்து தமிழக பா.ஜ.க. காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் குஜராத் முதல்வராக இருந்தவர் மோடி. இவர், கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க.வின் சார்பில் களம் இறக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில், தேசத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இன்று வரை இரவு பகலாக அரும்பாடுபட்டு வருகிறார்.

பிரதமர் மோடியின் கடின உழைப்பின் பலனாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அதன்பொருட்டு, வல்லரசு நாடுகள் கூட தங்களது முழு கவனத்தையும் இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளன. இதன்காரணமாக, இந்தியாவின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றாக இருப்பது கதிசக்தி திட்டம். இந்த, திட்டத்தின் வாயிலாக இந்தியா எந்த அளவிற்கு வேகமாக முன்னேறியுள்ளது, என்பதை விளக்கும் வகையில் தமிழக பா.ஜ.க. அதுகுறித்தான காணொளி ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it