காங்கிரஸில் இருந்து விலகியது ஏன்?: ராஜாஜி கொள்ளுப் பேரன் விளக்கம்!

காங்கிரஸில் இருந்து விலகியது ஏன்?: ராஜாஜி கொள்ளுப் பேரன் விளக்கம்!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் ஏன்? விலகினேன் என மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர் மற்றும் பல்வேறு பொறுப்புகளை அலங்கரித்தவர் சி.ஆர்.கேசவன். இவர், அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகினார். இவரது, விலகல் காங்கிரஸ் தொண்டர்களை மட்டுமில்லாமல் எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தன.

இப்படிப்பட்ட சூழலில், சி.ஆர்.கேசவன் தனது தரப்பு விளக்கத்தை இவ்வாறு கூறியுள்ளார் ;

2002-ல் மத்திய பா.ஜ.க. அரசு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாமை நிறுத்தியது. அப்போது, கட்சிக் கொள்கை, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் தனது ஆதரவினை அளித்தது. அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் முதல்முறையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டார். எனினும், அவரை தீய சக்தியின் பிரதிபலிப்பு, நாட்டின் சாபக்கேடு என்று சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்தனர்.

அந்த வகையில், கடந்த ஜனவரியில் 21 தீவுகளுக்கு பரம்வீர்சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயர்களை மத்திய பா.ஜ.க. அரசு சூட்டியது. அதில், 14 பேர் உயிர்த் தியாகம் செய்தவர்கள். ஆனால், அவர்கள் என்ன சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்தார்களா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று மூத்த காங்கிரஸ் தலைவர் விமர்சித்தார். இதில் எனக்கு உடன்பாடில்லை.

அண்மைக்காலமாக காங்கிரஸின் அணுகுமுறை மற்றும் கொள்கைகளில் இருந்து எனது கொள்கைகள் வேறுபடுகின்றன. இனியும், காங்கிரஸில் நீடிப்பது சரியாக இருக்காது என்று கருதினேன். அதன்படி, அக்கட்சியில் இருந்து விலகினேன். கர்ணனும், விபீடணனும் அவர்களின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு நேர்மாறான இடத்தில் இருந்தனர். தவறான இடத்தில் இருக்கிறோம் என்று தெரிந்தும், அங்கேயே இருந்து தன்னை அழித்துக்கொண்டவன் கர்ணன். நான் அரசியலில் கர்ணனாக இருக்க விரும்பவில்லை.

விபீடணன், தனது சிந்தனைக்கு நேர்மாறான இடத்தில் இருந்தாலும், அதிலிருந்து வெளியேறி, தனதுகோட்பாடுகளுக்கு ஏற்ற இடத்துக்குச் சென்றார். அப்படி எனக்கு ஏற்ற இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். 2001-ல் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோதுதான் நான் கட்சியில் இணைந்தேன். நான் எப்போதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. அண்மையில் தேசிய அளவில் முக்கியப் பதவி கொடுக்க காங்கிரஸ் விரும்பியது. எனினும், சிந்தனை அளவில் எனக்கும், கட்சிக்கும் இடைவெளி இருப்பதால், அப்பதவியை நான் ஏற்கவில்லை.

தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத் துணைத் தலைவர் பதவி, பிரச்சார் பாரதி உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி எனக்கு வழங்கினர். அவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எதிர்காலத்தில் பா.ஜ.க.வில் சேருவேனா என்பதற்கு காலம்தான் பதில் கூறும். எனது எண்ணங்களுக்குப் பொருத்தமான கட்சியில் இணைந்து பணியாற்றுவேன் என அவர் கூறியுள்ளார்.

இவரது, விளக்கத்தினை தொடர்ந்து சி.ஆர்.கேசவனுக்கு உரிய மரியாதை கொடுக்கும் கட்சியாக பா.ஜ.க. இருக்கும். அவர், அக்கட்சியில் இணைய வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it