பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன்? இருக்க கூடாது என பரூக் அப்துல்லா பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமாக இருப்பவர் மு.க. ஸ்டாலின். இவர், தனது 70 -வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அந்த வகையில், தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா சென்னை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையடுத்து, நிருபர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அந்த வகையில், அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;
“இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியின் தொடக்கமாக இந்த நிகழ்ச்சி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க செய்து வரும் முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்பதே எங்கள் குரலாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து அதன்பின்னர் யார் இந்த நாட்டை வழிநடத்த சிறந்தவரோ அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார். முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் ஆவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்டாலின் ஏன் இருக்க கூடாது? என பதில் கேள்வியை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதப் பிரதமராக 10 முறை மோடி வந்தாலும் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து 370-வது சட்ட பிரிவை நீக்க முடியாது என்று கூறியவர் பரூக் அப்துல்லா என்பது குறிப்பிடத்தக்கது.