பத்ம விருது பெற்ற ரஷீத் அகமது பிரதமரை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பத்மஸ்ரீ விருதுகள், பத்ம பூஷன் உள்ளிட்ட விருதகள் வழங்கப்பட்டு வந்தன. பாரதப் பிரதமராக மோடி பதவியேற்ற பின்பு இந்த நடைமுறையை முற்றிலும் ஒழித்து கட்டினார்.
நாட்டிற்கும், சமூகத்திற்கும் சேவையாற்றியவர்களை அடையாளம் கண்டு கெளரவிக்கப்பட்டு வருகிறார்கள். இதில், கட்சி பாகுபாடின்றி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தி.மு.க.வின் மிக மூத்த உறுப்பினரும் பெண் விவசாயியுமான பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு பெருமைப்படுத்தியது.
இப்படிப்பட்ட சூழலில், நேற்றைய தினம் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விருது பெற்றவர்களை பாரதப் பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பத்ம விருது பெற்ற ரஷீத் அகமது கட்டாரி கூறியதாவது ;
காங்கிரஸ் ஆட்சியில் இந்த விருது கிடைக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் கிடைக்கவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் நிச்சயம் கிடைக்காது என்று கருதினேன். ஆனால், எனக்கு கிடைத்து விட்டது. இந்த விருது வழங்கிய தங்களுக்கு எனது நன்றி என அவர் தெரிவித்தார்.