சிறுபான்மையினர் நிம்மதியாக வாழும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக சி.பி.ஏ. எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவை தலைமை இடமாக கொண்ட அமைப்பு சி.பி.ஏ. ( கொள்கை பகுப்பாய்வு மையம்) இந்த அமைப்பு, 110 நாடுகளில் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. அதில், சிறுபான்மையினரை ஏற்றுக்கொள்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தென் கொரியா, ஜப்பான், பனாமா, அமெரிக்கா, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா உள்ளிட்ட நாடுகள் கடைசி இடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளன.
இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முறையே 54 மற்றும் 61 இடங்களில் வருவதாக அந்த அறிக்கை கூறுகின்றன. மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் இந்தியாவில் எந்த மதப் பிரிவுகளுக்கும் எந்தத் தடையும் இல்லை. . ஐ.நா. சபை இந்தியாவின் சிறுபான்மைக் கொள்கையை மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகப் பயன்படுத்தலாம் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
சி.பி.ஏ. அமைப்பின் ஆய்வறிக்கை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பிரிவினை சக்திகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.