பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை மீட்பார்: – ஏ.எஸ்.துலாத் கருத்து!

பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானை மீட்பார்: – ஏ.எஸ்.துலாத் கருத்து!

Share it if you like it

பாகிஸ்தானுக்கு பாரதப் பிரதமர் மோடி நிச்சயம் உதவி செய்வார் என முன்னாள் ’ரா அமைப்பின் தலைவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாய் வீடு என்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், பல்வேறு தீவிரவாத குழுக்கள் இன்றுவரை அந்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. தீவிரவாதிகளை கட்டுப்படுத்தாமல் அவர்களுக்கு முட்டு கொடுப்பதிலேயே பாகிஸ்தான் அரசு தனது முழுநேரத்தையும் செலவிட்டு வருகின்றன. இதன்காரணமாக, மிக கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு பெருமளவு குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.200, ஒரு லிட்டர் பால் ரூ.200, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.900 விலையில் விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பல்வேறு நகரங்கள் இரவில் இருளில் மூழ்கியுள்ளன. தொழில் துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இப்படியாக, அந்நாட்டின் பொருளாதாரம் இருந்து வருகிறது.

இந்த சூழலில் தான், இந்திய உளவு அமைப்பான ‘ரா’ வின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் ;

ரஷ்யா, சீனா, ஈரான் ஆகியவை கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. இது ஆபத்தான கூட்டணி. சமீபகாலமாக, இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவு வலுவடைந்து வருகிறது. எனினும், இந்தியாவில் இருந்து வெகுதொலைவில் அமெரிக்கா உள்ளது. எனவே, அண்டை நாடுகளுடன் இந்தியா சுமூக உறவை பேணுவது அவசியம்.

தற்போது பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. என்னுடைய, கணிப்பின்படி இந்த ஆண்டில் பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவுவார். அந்த நாட்டை மீட்டெடுப்பார். வெளிநாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் உதவி பெறுவது கடினம். அந்த நாடு இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கி, வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது என அவர் கூறியுள்ளார்.


Share it if you like it