போட்றா வெடியை ! பதக்கத்தில் சென்சுரி அடித்த இந்தியா, பாராட்டிய மோடி !

போட்றா வெடியை ! பதக்கத்தில் சென்சுரி அடித்த இந்தியா, பாராட்டிய மோடி !

Share it if you like it

கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சீனாவில் நடந்து வருகின்ற ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை பெறாத பல பதக்கங்களை வாரி குவித்துள்ளது. மொத்தம் 100 பதக்கங்களை நம் இந்திய வீரர்கள் நம் நாட்டுக்கு பெற்று தந்து பெருமை சேர்த்துள்ளனர். ஒருகாலத்தில் ஒரு பதக்கமாவது வெல்லாதா என்று கவலையுடன் பார்த்திருப்போம். ஆனால் இன்று அப்படியே தலைகீழாய் மாறியுள்ளது. நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக ஸ்போர்ட்ஸ் -ல் இளைஞர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா, ஸ்கில் இந்தியா என பல திட்டங்களை கொண்டுவந்தார்.

இதனால் கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் கூட ஸ்போர்ட்ஸ் ல் கலந்துகொண்டு தமது திறமைகளை காட்டினர். கடந்தமுறை நடந்த ஆசிய விளையாட்டில் வென்ற பதக்கங்களை விட தற்போது அதிக பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அதில் 25 தங்கப்பதக்கமும் 35 வெள்ளிப்பதக்கமும் 40 வெண்கல பதக்கமும் வென்று ஆகமொத்தம் 100 பதக்கங்களை வென்று சென்சுரி அடித்துள்ளது இந்தியா. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டு வீரர்களை பாராட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை !

100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சரித்திரம் படைத்து, நம் இதயங்களை பெருமையால் நிரப்பியது.

வரும் 10ஆம் தேதி நமது ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கும், எங்கள் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். பலரும் அந்த பதிவினை ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகின்றனர்.


Share it if you like it