லதா மங்கேஷ்கரின் சேவையை நினைவு கூர்ந்த பாரதப் பிரதமர்..!

லதா மங்கேஷ்கரின் சேவையை நினைவு கூர்ந்த பாரதப் பிரதமர்..!

Share it if you like it

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இவரின் மறைவிற்கு பாரதப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இந்திய ரசிகர்களை மட்டும்மில்லாமல் உலகம் முழுவதிலும் தனக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் லதா மங்கேஷ்கர். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் என இவர் மரணம் அடைந்த செய்தி அவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி பாரதப் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலையும், தனது எண்ணத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். அவரின் பதிவு.

லதா திதியின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகின் மாற்றங்களை அவர் நெருக்கமாகக் கண்டவர். திரைப்படங்களுக்கு அப்பால், அவர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். அவர் எப்போதும் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் காண விரும்பினார்.

லதா திதியிடம் நான் எப்போதும் அளவற்ற பாசத்தைப் பெற்றிருப்பதை எனது மரியாதையாகக் கருதுகிறேன். அவருடனான எனது தொடர்பு மறக்க முடியாததாக இருக்கும். லதா திதியின் மறைவால் எனது சக இந்தியர்களுடன் நான் துக்கப்படுகிறேன். அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினேன் ஓம் சாந்தி. இவ்வாறு பாரதப் பிரதமர் மோடி லதா மங்கேஷ்கரின் சேவையை நினைவு கூர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it