பிரதமரின் சொத்து மதிப்பு வெளியீடு!

பிரதமரின் சொத்து மதிப்பு வெளியீடு!

Share it if you like it

பாரதப் பிரதமரின் மோடியின் சொத்து மதிப்பை பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பின் மூலம், படிப்படியாக முன்னேறி தற்போது நாட்டின் மிக உயரிய பொறுப்பில் அமர்ந்து இருப்பவர் மோடி. இவர், பாரதப் பிரதமராக பதவியேற்ற பின்பு அரசியலில் நேர்மை, தூய்மை, எளிமை மற்றும் அனைத்து துறைகளிலும் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என உறுதி பூண்டு இருந்தார். இதனை, இன்று வரை பிரதமர் மோடி மிக தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார். அந்த வகையில், இன்று பிரதமர் மோடி அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது; பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்தின் மதிப்பு, 26.13 லட்சம் ரூபாய் உயர்ந்து, 2.23 கோடி ரூபாயாக உள்ளது. குஜராத்தில் தன் பெயரில் இருந்த ஒரே நிலத்தை தானமாக வழங்கி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாரத தேசத்தின் நலனை கருத்தில் கொண்டும், அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த வகையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் அரபு தேசத்து மன்னர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு பல்வேறு நினைவு பரிசுகளை வழங்கி இருந்தனர். தனக்கு, கிடைக்கும் பரிசு பொருட்கள் மற்றும் தனது உழைப்பில் கிடைத்த ஊதியம் அனைத்தையும் மீண்டும் இந்திய மக்களுக்கே திருப்பி தருவதையே தனது கொள்கையாக பிரதமர் மோடி கொண்டு உள்ளார்.

அதில் சில துளி இதோ.

2019-ஆம் ஆண்டு கும்பமேளா திருவிழாவில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களின் நலனுக்காக தனது சேமிப்பிலிருந்து ரூ. 21 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். இதனை தொடர்ந்து, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ. 2.25 தொகையை நன்கொடையாக வழங்கி இருந்தார். அதேபோல, தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைத்த ரூ.8.35 கோடியை கங்கை நதி திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கி இருந்தார்.

மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்பு தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைத்த ரூ 3.40 தொகையை மீண்டும் கங்கை திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கினார். குஜராத் முதல்வராக இருந்த போது தனது சேமிப்பிலிருந்த ரூ.21 லட்சத்தை மாநில அரசு அதிகாரிகளின் மகள்களுக்கு கல்வி கற்பதற்காக நன்கொடையாக வழங்கினார்.

அதனை தொடர்ந்து, தனக்கு கிடைத்த அனைத்து பரிசுகளையும் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைத்த ரூ.89.96 கோடி ரூபாய் தொகையை கன்யா கேளவானி என்ற பெண்‌ குழந்தைகளின் கல்விக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி அமைப்புக்கு நன்கொடையாக வழங்கினார். 2015-ஆம் ஆண்டு தனக்கு பரிசாக கொடுக்கப்பட்ட தங்க இழைகளால் நெய்யப்பட்ட கோட்டை ஏலத்தில்‌ விட்டு அதில் கிடைத்த ரூ.4.31 கோடியை கங்கை நதி திட்டத்திற்கு வழங்கினார். தனக்கு கிடைக்கும் பரிசு பொருட்கள், தன் ஊதியம் என்று அனைத்தையும் பெண் கல்வி, கங்கை நதி திட்டம் மற்றும் ஏழைகளுக்கு வாரி வழங்குவதையே தனது கொள்கையாக பாரதப் பிரதமர் மோடி கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது குடும்பத்தை மறந்து நாட்டிற்காக இன்று வரை உழைக்கும் கட்சி பா.ஜ.க. நாட்டு மக்களை மறந்து தனது குடும்பத்திற்காக உழைக்கும் படையப்பா குடும்ப கட்சி தான் தி.மு.க. என்பது பலரின் கருத்தாக உள்ளது.

பிரதமரின் பரிசுப் பொருட்கள் ரூ.22 கோடிக்கு ஏலம்!
பிரதமருக்கு கிடைத்த பரிசு பொருட்கள்.

Share it if you like it

One thought on “பிரதமரின் சொத்து மதிப்பு வெளியீடு!

  1. இன்னும் பல ஆண்டுகள் மோடி ஜீ உச்சியில் இருந்து நல்லது செய்ய வேண்டும்

Comments are closed.