மத மாற்றத்தை தீவிரப்படுத்துங்கள் மோகன் சி  லாசரஸ்: உதயநிதி ஸ்டாலினுக்கு தொடர்பு?

மத மாற்றத்தை தீவிரப்படுத்துங்கள் மோகன் சி லாசரஸ்: உதயநிதி ஸ்டாலினுக்கு தொடர்பு?

Share it if you like it

சுவிசேஷத்தை ( மத மாற்றத்தை ) தீவிரப்படுத்துங்கள். அதாவது, மத மாற்றத்தை தீவிரப்படுத்துங்கள் என்ற ரீதியில் மோகன் சி லாசரஸ் பேசி இருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மோகன் சி. லாசரஸ். இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வழிபாட்டு முறைகளை கீழ்த்தமாக விமர்சனம் செய்ய கூடியவர். அதே வேளையில், பாரத தேசத்திற்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் இவரது வன்மம் நிறைந்த பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், கடந்த மூன்று வருடமாக மண்டியிட்டு ஜெபம் செய்து வருகிறேன் நிச்சயம் பிரதமராக மோடி வரமாட்டார். அப்படி, அவர் மீண்டும் பிரதமர் ஆனால் நான் ஏசுவை வணங்குவதை நிறுத்தி விடுகிறேன் என்று கூறியிருந்தார். எனினும், இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றவர் மோடி என்பதை நாடே நன்கு அறியும்.

அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தி தமது மதத்தை உயர்த்தி பேசுபவர்கள் ஒரு மனநோயாளி என்பதை அனைவரும் அறிவர். எனினும், இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி வருவதையே தனது முழு நேர தொழிலாக கொண்டவர். இவர், மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளன. ஆனால், இவர் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் காவல்துறை மேற்கொள்வதில்லை என்பதே நிதர்சனம்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் மோகன் சி லாசரஸ். இதன் காரணமாகவே, காவல்துறை இவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, நான் ஒரு கிறிஸ்தவன், எனது மனைவி கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர் என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், மோகன் சி லாசரஸ் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, சுவிசேஷத்தை ( மத மாற்றத்தை ) தீவிரப்படுத்துங்கள் என்று அவர் பேசிய காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. மோகன் சி லாசரஸ்க்கு, உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் பக்க பலமாக இருப்பதால் தான் தொடர்ந்து அவர் இவ்வாறு பேசி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it