இனிமேல் ஒரு மதத்தையோ, சமூகத்தையோ, மேடையில் காயப்படுத்த நினைத்தால் என் படத்தில் கேரக்டராக வந்து விடுவீர்கள் மோகன் ஜி எச்சரிக்கை..!

இனிமேல் ஒரு மதத்தையோ, சமூகத்தையோ, மேடையில் காயப்படுத்த நினைத்தால் என் படத்தில் கேரக்டராக வந்து விடுவீர்கள் மோகன் ஜி எச்சரிக்கை..!

Share it if you like it

நாடக காதலுக்கு எதிராக திரௌபதி படத்தை இயக்கிய மோகன் ஜி தற்போது ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில வெளியாகி மதமாற்றம் செய்யும் கும்பல்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது நிதர்சனம். இப்படத்தை எப்படியாவது திரைக்கு வராமல் தடுக்க வேண்டும் என கிறிஸ்தவ மிஷநரிகள் மிக தீவிரமாக இன்று வரை பணியாற்றி வருகின்றனர். அதனை எல்லாம் தாண்டி ருத்ர தாண்டவம் அக்டோபர் 1-ம் தேதி திட்டமிட்டப்படி திரைக்கும் வரும் என்று இயக்குனர் மோகன் ஜி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதனிடையே படத்தின் இயக்குநர் மோகன் ஜி செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:

மதமாற்றம் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை இந்த படத்தில் தோலுரித்து காட்டியுள்ளேன். பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இப்படத்தை தயாரித்துள்ளேன். மேலும் ரூ.43 லட்சம் முதலீட்டில் உருவான திரௌபதி படம் 20 மடங்கு வசூலை பெற்றது. அந்த படம் வெற்றிக்கு பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளேன். இந்து மதத்தை அழித்து விடுவேன் என்று சொல்லி மேடைளில் கை தட்டல் வாங்கிச் செல்லும் கும்பல் பின்னணியில் உள்ள கார்ப்பரேட் அரசியலை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதையை உருவாக்கி இருக்கிறேன்.

திரௌபதி படத்துக்கு சம்பளம் வாங்காமல் 8 மாதங்கள் நடித்து கொடுத்தவர் ரிச்சர்ட். அவரே இப்படத்திலும் நடிகர். எனக்காக குறைவான சம்பளம் வாங்கி நடித்தார் ராதாரவி. அவர் வக்கீலாக வருகிறார். கவுதம்மேனனும் மறுக்காமல் நடித்து கொடுத்துள்ளார். இனிமேல் ஒரு சமூகத்தை, ஒரு மதத்தை யாராவது காயப்படுத்தினால் அவர்களை நான் சினிமாவில் காட்டி விடுவேன். இந்து மதத்தை அழிக்க யாராவது நினைத்தால் என்னை மாதிரி ஒருவர் வந்து கொண்டே இருப்பார்கள் தனது எதிர்ப்பை சினிமாவில் காட்டுவார்கள் என்று மோகன் ஜி தெரிவித்து உள்ளார்.

நன்றி ; கதிர் நியூஸ்,


Share it if you like it

2 thoughts on “இனிமேல் ஒரு மதத்தையோ, சமூகத்தையோ, மேடையில் காயப்படுத்த நினைத்தால் என் படத்தில் கேரக்டராக வந்து விடுவீர்கள் மோகன் ஜி எச்சரிக்கை..!

  1. Yes. Some dirty politicians and fanatics dare to criticize particularly Hindu religion. They have no guts to criticize other religions. Because Hindu religion has patience and silently observes the these dirty politicians and fanatics.

Comments are closed.