அடேங்கப்பா… ‘தல’ தோனி வீட்டில் இவ்வளவு கார், பைக்குகளா? திகைத்த மாஜி வீரர்கள்… வீடியோ வைரல்!

அடேங்கப்பா… ‘தல’ தோனி வீட்டில் இவ்வளவு கார், பைக்குகளா? திகைத்த மாஜி வீரர்கள்… வீடியோ வைரல்!

Share it if you like it

கிரிக்கெட் வீரர் தல தோனியின் வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் கார் மற்றும் பைக்குகளை பார்த்து முன்னாள் வீரர்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கருதப்படுபவர் தல தோனி. ஒரு நாள் போட்டி, டி20, சாம்பியன் டிராபி என 3 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் இந்தியாவின் தோனிதான். கிரிக்கெட்டை எந்தளவிற்கு நேசிக்கிறாரோ அதே அளவுக்கு வாகனங்களின் பிரியர். இதை மேய்ப்பிக்கும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, தோனியின் வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் மற்றும் பைக்குகளை கண்டு திகைத்துப் போய் விட்டார். பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கும் வெங்கடேஷ் பிரசாத், “நான் ஒரு நபரிடம் பார்த்த மிகவும் பைத்தியக்காரத்தனமான உணர்வுகளில் இதுவும் ஒன்று. என்ன ஒரு கலெக்‌ஷன் மற்றும் என்ன ஒரு மனிதன் தோனி. ஒரு சிறந்த சாதனையாளர் மற்றும் இன்னும் நம்பமுடியாத நபர். இது அவரது ராஞ்சி வீட்டில் உள்ள பைக்குகள் மற்றும் கார்களின் சேகரிப்பின் ஒரு பார்வை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் 2 தளங்கள் முழுவதும் பைக்குகள் அணிவகுத்து நிற்கின்றன. இவற்றில், அண்மையில் வெளியான புத்தம் புதிய பைக் மாடல்களும் அடங்கும். மேலும், அந்த வீடியோவை எடுத்த பெண், “மஹி.. மஹி  ஏன்? எதுக்கு? இப்படி” என்று தோனியிடம் கேட்க, பதிலளித்த தோனி, “என் வீட்டில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இது ஒன்றுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் காரணமாகத்தான் வாகனங்களை தொடர்ந்து, இந்த கட்டடத்திற்கு பின்புறம் பேட்மிண்டன் களத்தையும் வைத்துள்ளேன்” என கூறியிருக்கிறார்.

இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it