பாரத தேசத்தை உடைத்த பிரிவினைவாதி முகமது அலி ஜின்னாவை தியாகி என்ற – அகிலேஷ் யாதவ்..!

பாரத தேசத்தை உடைத்த பிரிவினைவாதி முகமது அலி ஜின்னாவை தியாகி என்ற – அகிலேஷ் யாதவ்..!

Share it if you like it

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் தற்பொழுது எதிர்க்கட்சி தலைவராக உள்ள அகிலேஷ் யாதவ் முகமது அலி ஜின்னாவை சுந்திர போராட்ட தியாகி என்று அம்மாநிலத்தில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசிய காணொலி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பல தேச பக்தர்களின் ரத்தம், தியாகம், வியர்வை, கடும் உழைப்பு, கொடுத்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த எண்ணற்ற தலைவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி நமது பாரத சேதம் என்பதில் யாருகும் மாற்று கருத்து இருக்க முடியாது. நாட்டின் விடுதலையே தங்கள் உயிர் மூச்சு, என்று மிக தீவிரமாக வெள்ளையர்களை எதிர்த்து போராடியவர்கள் நமது முன்னோர்கள்..

இந்திய விடுதலைக்காக எண்ணற்ற தலைவர்களை தமிழ்நாடு போன்று உத்தரபிரதேசமும் வழங்கிய புண்ணிய பூமியில் இருந்து கொண்டு. அகிலேஷ் யாதவ் இந்தியாவை இரண்டாக பிளந்த பிரிவினைவாதி முகமது அலி ஜின்னாவை சுந்திர போராட்ட தியாகி என்னும் வகையில் பேசி இருப்பது இந்திய மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்கள் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பே மதத்தின் பெயரில் நாட்டை பிரித்து தனி நாடு வாங்கிய பிரிவினைவாதியை தியாகி என்று பேசிய அகிலேஷ் யாதவ் போன்றவர்கள் மீது யோகி அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரிவினைவாதி முகமது அலி ஜின்னாவின் நினைவு சின்னம் இன்றும் பாரதத்தில் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருப்பது இந்தியர்களுக்கு மிகப்பெரிய அவமானம் என்பது நிதர்சனம்.


Share it if you like it