லவ்ஜிகாத்… லிவ் இன்… ஹிந்து பெண் கொலை: 3 மனைவிகளின் கணவன் ரியாஸ் கான் கைது!

லவ்ஜிகாத்… லிவ் இன்… ஹிந்து பெண் கொலை: 3 மனைவிகளின் கணவன் ரியாஸ் கான் கைது!

Share it if you like it

லவ்ஜிகாத் காதல் வலையில் வீழ்த்தி, லிவ் இன் வாழ்க்கை நடத்திவிட்டு, ஹிந்து பெண்ணை கொலை செய்து ஆற்றில் வீசிய 3 மனைவிகளின் கணவரான ரியாஸ் கானை போலீஸார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பூண்டியைச் சேர்ந்தவர் ஊர்வி வைஷ்ணவ். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு வந்த இவர், தனது சகோதரர்கள் பராஸ், ஆயுஷ் ஆகியோருடன் கோபர் கைரானே பகுதியில் வசித்து வந்தார். இவர், மும்பையிலுள்ள ஒரு பிரபல தனியார் ஹோட்டலில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில், ஜிம் பயிற்சியாளரான ரியாஸ் கான் என்பவன், ஊர்வியை லவ் ஜிகாத் எனும் காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். இவனுக்கு ஏற்கெனவே 3 மனைவிகள் இருக்கிறார்கள். இதை மறைத்து ஊர்வியிடமும் பழகி இருக்கிறான். பின்னர், இருவருக்குமான நெருக்கம் அதிகரிக்கவே, இருவரும் லிவ் இன் வாழ்க்கை வாழத் தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த 2 வருடங்களாக லிவ் இன் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், ரியாஸ் கானுக்கு ஏற்கெனவே திருமணமான விஷயமும், 3 மனைவிகள் இருப்பதும் ஊர்விக்கு தெரியவந்திருக்கிறது. எனவே. தன்னையும் திருமணம் செய்து கொள்ளும்படி சமீபகாலமாக ரியாஸ் கானிடம் வலியுறுத்தி வந்திருக்கிறார் ஊர்வி. இதற்கு, ரியாஸ் கான் சாக்குபோக்கு சொல்லி வந்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ஊர்வி, தங்களுக்குள் இருக்கும் நட்பு தொடர்பாக ரியாஸ் கானின் மனைவிகளிடம் சொல்லப்போவதாகவும், போலீஸில் புகார் கொடுக்கப்போவதாகவும் மிரட்டி இருக்கிறார். ஆகவே, ஊர்வியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தவன், சமயம் பார்த்து காத்திருந்தான்.

இந்த சூழலில், கடந்த 12-ம் தேதி நைசாக ஊர்வியிடம் பேசி, காரில் அழைத்துச் சென்றிருக்கிறான். வழியில், தனது கூட்டாளியான இம்ரான் ஷேக்கையும் காரில் ஏற்றிக் கொண்டவன், நேராக நவிமும்பை பகுதியான ஷில்பாடாவுக்குச் சென்றிருக்கிறான். அங்கு, ரியாஸ் கான் மற்றும் இம்ரான் ஷேக் ஆகியோர் சேர்ந்து ஊர்வியை காரிலேயே வைத்து கயிற்றால் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, காதி ஆற்றில் வீசி விட்டு எஸ்கேப்பாகி விட்டனர். இதனிடையே, கடந்த 17-ம் தேதி காதி ஆற்றில் இளம்பெண்ணின் சடலம் மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், போலீஸார் ஊர்வியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்த விசாரணையை போலீஸார் தொடங்கினர். காணமல் போன பெண்கள் பற்றிய லிஸ்டை தயார் செய்தனர். மேலும், ஊர்வி அணிந்திருந்த பிராண்டட் செருப்பை வைத்தும், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஒரு குறிப்பிட்ட கடையில் அந்த செருப்பை ஊர்வி வாங்கியது தெரியவந்தது. மேலும், அவருடன் திடகாத்திரமான ஒரு நபர் வந்ததும் தெரியவந்தது. பின்னர், ஊர்வி வேலை செய்த ஹோட்டலில் விசாரித்தபோது, அவர் கடந்த 13-ம் தேதி முதல் வேலைக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இறந்தது ஊர்விதான் என்பதை உறுதி செய்த போலீஸார், உடன் வந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்தனர்.

அப்போதுதான், ரியாஸ் கானுக்கும் ஊர்விக்கு பழக்கம் இருந்தது தெரிந்தது. பின்னர், ரியாஸ் கானின் நண்பரான இம்ரான் ஷேக்கை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான், இருவரும் சேர்ந்து ஊர்வியை கொலை செய்து ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இம்ரான் ஷேக்கை கைது செய்த போலீஸார், பின்னர் ரியாஸ் கானையும் கைது செய்தனர். இதனிடையே, ஊர்வியின் உடல் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடந்தது.


Share it if you like it