30 வருடமாக மனைவிக்கு தமிழே சொல்லிக் கொடுக்காமல் இருந்துவிட்டு, ஏதோ தமிழ் பற்றாளர் போல பொதுவெளியில் தமிழணங்கே போடுவதா என்று ஏ.ஆர்.ரஹ்மானை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
சென்னையில் விகடன் விருது வழங்கும் விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2022-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தனது மனைவி சாயிரா பானுவுடன் கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னர், அவருக்கு விருது வழங்கும்போது அவரது மனைவியையும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மேடைக்கு அழைத்தனர். மேடை ஏறிய சாயிரா பானுவிடம் ஹிந்தியில் பேசாமல் தமிழில் பேசும்படி ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னார். அதற்கு அவரோ, தனக்கு தமிழ் தெரியாது என்று கூறிவிட்டு, ஆங்கிலத்தில் பேசினார்.
இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் மனைவிக்கு தமிழ் தெரியாதா? அப்படியானால் வீட்டில் என்ன மொழியில் பேசிக்கொள்வார்கள் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, நடிகை கஸ்தூரியை டேக் செய்து காதலுக்கு மரியாதை என்று பதிவிட்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுதான் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அதாவது, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடந்த பார்லிமென்ட் அலுவல் மொழி குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மக்கள் ஹிந்தி மொழியை பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார்.
அப்போது, இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் என்கிற பாரதிதாசன் பாடல் வரிகளுடன், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கே ஓவியத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தான் ஒரு தமிழ் பற்றாளர் போல காட்டிக் கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதேபோல, ஆஸ்கார் விருது வழங்கும் விழாவிலும் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் பேசி, தான் ஒரு தமிழ் போராளி போல காட்டிக் கொண்டார். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த செயல்பாடு முழுவதும் வெளிவேஷம் என்பது தற்போது நிரூபணமாகி இருப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
காரணம், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால், அவரது மனைவி சாயிரா பானுவுக்கு தமிழ் தெரியவில்லை. அப்படியானால், ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவிக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை என்றுதானே அர்த்தம். மேலும், இதன் மூலம் வீட்டிலும் இவர்கள் தமிழில் பேசிக்கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. அப்படி என்றால், இருவரும் வீட்டில் ஹிந்தியில் பேசிக்கொள்கிறார்கள் என்றுதானே பொருள். ஆகவே, ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி மட்டுமன்றி அவரது குழந்தைகளுக்கும் தமிழ் தெரியுமா என்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.
இதை வைத்து நெட்டிசன்கள் ஏ.ஆர்.ரஹ்மானை வறுத்தெடுத்து வருகின்றனர். திருமணமாகி 30 வருடங்களாகும் நிலையில், மனைவிக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க துப்பில்லாத ஏ.ஆர்.ரஹ்மான், பொதுவெளியில் தமிழணங்கே படத்தைப் போட்டு தமிழ் போராளி போல காட்டிக் கொள்வது வெட்கமாக இல்லையா என்றும், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த முஸ்லீம்களும், பானிபூரி விற்க வந்த வடநாட்டினரும் சூப்பராக தமிழ் பேசும்போது, ஏ.ஆர்.ரஹ்மானே உன்னால் முடியாமல் போனது ஏன்? தமிழ் எல்லாம் வெளி வேஷம்தானா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.