நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை – தேசிய கவிஞனுக்கு பாரதத்தின் புகழ் வணக்கம் !

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை – தேசிய கவிஞனுக்கு பாரதத்தின் புகழ் வணக்கம் !

Share it if you like it

1930 உப்புச் சத்தியாகிரகத்தின் போது ராஜாஜியின் தலைமையில் பாரதியாரின் பாடலை பாடிக் கொண்டே தொண்டர்கள் அணிவகுத்து நடை பயணம் சென்றனர் அப்போது நாமக்கல்கவிஞர் ‘கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகிறது’ என்ற பாடலை பாடினார். இராஜாஜி, பாட்டுக்கு ஒரு பாரதி இல்லையே என நான் நினைத்தேன் அந்த வெற்றிடத்தை நிரப்பி விட்டார் நாமக்கல் கவிஞர் என்று பாராட்டினார் .இதன்பிறகு அவர் தேசிய கவிஞராக அறியப்படுகிறார்

தேசியம் தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாகவே பார்த்தார் என்பதை அவரது இப்பாடலின் மூலம் பார்க்கமுடியும்

இளைஞர் சபதம் என்ற பாடலில் அவர் ,

‘எந்த தேசம் எந்த நாட்டில் எந்த குண்டை போடுமோ

என்று மக்கள் உலகில் எங்கும் ஏங்குமிந்த நாளிலே

இமயம் தொட்டு குமரிமுட்டும் இங்கிருக்கும் யாவரும்

இந்தியாவின் மக்கள் என்று சொந்தம் காண செய்குவோம்.

என்ற இந்த பாடலில் உலகம் முழுதும் அமைதியில்லை.ஆனால் பாரதத்தில் மட்டுமே அமைதி உள்ளதாக கூறியுள்ளார் .அதேபோல், ‘

ஜெய்ஹிந்த் என்கின்ற ஜீவநந்நாதம் நம் தேசத்தின் ஒற்றுமை சேர்க்கின்ற கீதம்’ என்று ஜெய்ஹிந்த் முழக்கத்தை முன்னெடுக்கின்றார்.

தேசமடி ஹிந்து தேசமடி

நம்மை பாசத்துடன் பெற்று பாவித்தவள்

தேசமடி ஹிந்து

தேசமடி

எங்கள் தேவியடி எங்கள் ஆவியடி

தேசம் என்பது என் உயிர் என்பதன் மூலம் அவரது தேசபக்தி வெளிப்படுகிறது.

தமிழன் என்று சொன்னாலும் கூடதனித்தமிழை முன்னெடுக்கவில்லை.

தமிழர் என்னும் தனி பெருமை தாங்கிநின்று

தனிமுறையில் செயல்புரிய செயல்பட்டாலும்

இமயம் முதல் குமரிமுனை இறுதியாகும்

இந்திய தாய் சொந்தமதை இகழ்ந்திடாமல்

அமைதியுடன் ஒற்றுமை உறுதியாக்கும்

அதுதான் நம் குடியரசின் ஆக்கம் காக்கும்.

என்று குடியரசுக்கு வாழ்த்துக்கூறுகிறார்.

தமிழ் என்று தனிப்பெருமையைச்சொன்னாலும்கூட இமயம் முதல் குமரிமுனை வரை ஓரே நாடு என்பதை மறந்துவிடாதீர் என்று கூறுகிறார்.

எந்த பாஷை எந்த நாட்டில் எந்த பேச்சு எனினும்

எங்களுக்கு பேதம் இல்லை எதையும் பேச துணிவோம்

சொந்த பாஷை பெருமைக்காக சூளு சொல்ல மாட்டோம் என்று எல்லா மொழியும் ஒன்றே என்பதை வலியுறுத்துகின்றார்.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு

தமிழ் தெய்வம் திகழும் திருநாட்டில்

இத்தினம் திருநாள் ஆதலின்

ஈசனை போற்றி வரம் கேட்போம்

இத்தினத்தை புனிதமான ஆண்டின் துவக்கமாக கடைபிடிக்குமாறு கூறுகிறார் .

விந்தைமிகு விஞ்ஞான வித்தைகளை

விதவிதமாக பாராட்டிட்டாலும்

சிந்தையில் தெய்வ பயம் இருக்க வேண்டும் என்று

விஞ்ஞானம் வளர்ந்தாலும் தெய்வீகத்தையும் மறந்திடக் கூடாது என்பதை இப்பாடல் மூலம் வலியுறுத்தினார்.

நாத்திகம் தான் நாகரீகச்சின்னம் போல

மூத்தறிந்த முன்னோரை பின்னம் பேசி

சூத்திரத்தில் ஆடுகின்ற பொம்மை போல

சொந்த புத்தி இழந்து விடல் நன்றோ

ஆத்திச்சூடி நல்லறிவை அழித்துவிட்டோம்

ஆசார கோவை தன்னை இழித்து விட்டோம்

தன்னறிய தெய்வத்தின் நிலைமை கூட் டும்

பிள்ளையார் சுழி போட்டு கடிதம் தீட்டும்

தெள்ளறிஞர் நமது முன்னோர் செயலைக்கூட

எள்ளி நகை ஆடுகின்றார் ஏழை நெஞ்சே

இப்பாடலில் நாத்திகம் பேசி நம் பாரம்பரிய முன்னோரை, அவர்களது செயலை பழிப்பது சரியா என்று கேட்கின்றார்.

பிள்ளையார் முருகன் போன்ற பல கடவுளர்களை புகழ்ந்து எழுதியுள்ளார்

பகவத் கீதை இரண்டாவது அத்தியாயத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் .

ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்

தமிழர்கள் கடல் கடந்து பல வருடம் வாணிபம் செய்தமையால் பல்வேறு கலாச்சாரமும், பிற மொழி கலப்பும் இருப்பது இயல்பு. ஆகையால் தனித்தமிழ் என்று பிரித்துப் பார்ப்பது தவறு என்று இதன் மூலம் அவர் கூறுகின்றார்.

தீண்டாமை என்ற தீய பழக்கம், வேதத்தில் இல்லை, பகவத் கீதையில் இல்லை,நாயன்மார்கள் பாடலில் இல்லை ,ஆழ்வார்கள் பாசுரத்தில் இல்லை .

எண்ணிய பக்தருக்கு எளியது தெய்வம்

என்பதுவே நல்ல இந்து தர்மம் என்பதை தெளிவாகக் கூறியிருக்கிறார்

பாரதத்தின் மேன்மையை அவர் இவ்வாறு விவரிக்கிறார் :

சீதை பிறந்ததும் இந்நாடே

அவரின் கீர்த்திகள் விளங்கியதும் இந்நாடே

கீதை பிறந்ததும் இந்நாடே

வெகு கீர்த்திகள் பெற்றதும் இந்நாடே என்று

பாரத நாட்டை குறிப்பிடும் போது மன்னரின் செல்வச்செழிப்பை பற்றியோ , அவர்களின் மேன்மையை பற்றி கூறாமல் சீதையை பற்றி குறிப்பிடுகிறார் . அறவழியில் வாழ்வதே சிறந்தது என குறிப்பிடுகிறார்.

ராமன் சீதை கதை கேட்போரெல்லாம் ஸ்ரீதேவி வாசம் மிகு திகழ்ந்து வாழ்வார்

இராமன் பேரை அவமதிப்போர் தன்னை அக்காளே இக்காலும் ஆட்சி கொள்வாள்

இதில் ராமரை இகழ்வோரை அழிவினை சந்திப்பார் என கூறுகிறார்.

பின்னாளில் அவர் சட்ட பேரவை உறுப்பினராகிறார். 1949ல் அரசவை கவிஞர் ஆகிறார். வயதான காரணத்தினாலே தனது பெரிய மகள் இல்லத்தில் சென்னையில் இருந்து விடுகின்றார் .1972 ஆகஸ்ட் 23ஆம் தேதி மரணம் அடைகின்றார்.

நிறைவவாக:

இன்றைய சூழ்நிலையை அன்றே கூறிவிட்டார் அந்த தீர்க்கதரிசி கோயில் குளங்கள் இடித்துரைக்கும்

குழந்தைகள் பெண்களை கொலை புரியும்

பேயின் கூத்தினை களித்திடவே

பெரிதும் சுதந்திரம் தொடுத்திடுவோம்

மூர்க்கர்கள் உலகினை ஆள்வதையும்

முற்றிலும் தர்மம் தாழ்வதையும்

போக்கிட சுதந்திரம் வேண்டிடுவோம்

புண்ணிய முறையில் ஆண்டிடுவும்.

— திரு.ராஜேஸ்வரி


Share it if you like it