ஒரு ரூபாய் லஞ்சம்… 300 கோடி ஊழல்… நியாயமா? – நாராயணன் திருப்பதி காட்டம்!

ஒரு ரூபாய் லஞ்சம்… 300 கோடி ஊழல்… நியாயமா? – நாராயணன் திருப்பதி காட்டம்!

Share it if you like it

விவசாயிகளிடமிருந்து தி.மு.க. மற்றும் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்றனர் என தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ;

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு கிலோ ஒன்றிற்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூபாய். 2060 ஐ (கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய், 60 காசுகள்) முழுமையாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் நிலையங்களை அமைத்து குறைந்த பட்ச ஆதார விலைக்கு வாங்கும் பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது.

தமிழகத்தில் வருடத்திற்கு சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் (அதாவது 300 கோடி கிலோ) நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், கொள்முதல் செய்வதற்கான அனைத்து செல்வுகளையும் அரசே ஏற்கிறது. விளைவித்த பொருளுக்கு ஒரு பைசா கூட விவசாயிகள் செலவு செய்ய தேவையில்லை.

ஆனால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு கிலோ நெல்லுக்கும் ரூபாய். 1/- லஞ்சமாக பெறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு வருடமும் ரூபாய் 1/- லஞ்சப்பணமாக 300 கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுகிறது. இந்த பணத்தை இடைத்தரகர்களும், அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் பங்கு போட்டு கொள்கின்றனர்.

ஆனால், இவர்கள் தான் முழு நிதியையும் செலுத்தி நெல்லை வாங்கும் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர். முழு தொகைக்கான பணமும் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால், லஞ்சம் ஒரு ரூபாய் லஞ்சம் செலுத்த மறுத்தால் கொள்முதல் செய்ய மறுக்கப்படுவது கொடுமையான செயல்.

எவ்வளவு போராடியும் இந்த ஊழல் அமைப்பை அசைத்து கூட பார்க்க முடியாத கட்டமைப்பை பெற்றுள்ளது தான் ‘திராவிட மாடல்’!!! ஒரு ரூபாய் லஞ்சம்! 300 கோடி ஊழல்! நியாயமா? இது நியாயமா?


Share it if you like it