பா.ஜ.க. மூத்த தலைவருக்கு கொலை மிரட்டல்!

பா.ஜ.க. மூத்த தலைவருக்கு கொலை மிரட்டல்!

Share it if you like it

பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதிக்கு சி.பி.ஐ.எம். கட்சியை சேர்ந்த நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ ;

கடந்த 22/02/2023 அன்று சென்னை-கோவை ‘ஷதாப்தி விரைவு ரயிலில்’ நான் சேலம் சென்று கொண்டிருந்த போது, சி.பி.ஐ.எம் கட்சியை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பவர் பிரதமர் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததை கண்டித்து முறையாக, சட்ட ரீதியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தேன். காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இணைந்த காவல் துறையினர் பொது மக்கள்/பயணிகளிடம் விசாரித்த பின் அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அந்த நபர், பிரதமரை தரக்குறைவாக விமர்சித்ததற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டதையடுத்து நான் கொடுத்த புகாரினை

திரும்ப பெற்று கொண்டேன். என் நோக்கம் அவரை தண்டிப்பதல்ல, பொது இடத்தில் பிரதமரை ஒருமையில் பேசக்கூடாது, அவதூறாக பேசக்கூடாது என்பதை உணர வேண்டும் என்பதே. சேலம் ரயில் நிலையத்தை நான் சென்றடைந்ததும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நண்பர் திரு. கனகராஜ் தன் ட்விட்டர் பதிவில் “என்ன மிஸ்டர். நாராயணன், பிரதமரை விமர்சிக்கக்கூடாதா? காவல்துறையினரை அழைத்து ரயிலில் இருந்து இறங்க செய்வீர்களா?” என்று பதிவிட்டிருந்தார். உடன் அவரை அலைபேசியில் அழைத்தேன். உண்மையை சொன்னேன். பத்து நிமிடங்களில் அழைப்பதாக சொன்னார். அழைக்கவில்லை. ஆனால், அன்றும், மறுநாளும்

சி.பி.எம் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் என்னை கண்டித்து பதிவிட்டிருந்தார். மன்னிப்பு கேட்ட சாமுவேல் ராஜ் அவர்களும் தனியாக ஒரு வீடியோ பதிவிட்டு என்னை விமர்சித்திருந்தார். மேலும், தமிழகம் முழுவதும் என்னையும், ரயில்வே காவல்துறையையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நடத்துவோம் என்றும் திரு.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கூறியிருந்தார். அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் என்னை தரக்குறைவாக பேசியும், கண்டித்தும், எச்சரிக்கை விடுத்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. குறிப்பாக கடந்த 28/02/2023 அன்று மாலை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சாமுவேல் ராஜ் அவர்கள் “என்னை எங்கு பார்த்தாலும் அடிப்பேன், தாக்குவேன் என்றும், தமிழ்கத்தில் எங்கு பார்த்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாராயணனை சும்மா விட மாட்டார்கள்” என்றும் பேசியதாக தகவல். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட அந்த நபர், வன்மத்தின் காரணமாக, ஒரு இயக்கத்தின் போர்வையில் என்னை தாக்குவேன் என்று மிரட்டல் விடுப்பதும், அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்பதும் அராஜகமே.

ரயிலில் நடந்த சம்பவம் குறித்து சில மணி நேரங்களிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சிலரிடம் நான் பேசினேன். அதை அவர்களும் புரிந்து கொண்ட போதிலும் எனக்கு கொலை மிரட்டல் விடுப்பதும், அராஜகமாக பேசுவதும் அநாகரீகம். இது போன்ற மிரட்டல்களுக்கு அஞ்சுபவனல்ல இந்த நாராயணன் திருப்பதி. ஆனாலும், சட்டத்தை தன் கைகளில் எடுத்து கொள்ள யாருக்கும் உரிமையில்லை. என்னை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த நபரை கைது செய்வதோடு. அதற்கு காரணமான சி.பி.ஐ.எம். கட்சியின் தலைவர்கள் மீது தமிழக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்நாட்டின் பிரதமரை அவதூறு மற்றும் அவமரியாதை செய்தவர்கள் மீது காவல் துறையினரின் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்த எனக்கெதிராக கொலை மிரட்டல் விடுக்கும் சமூக விரோத கும்பலின் தூண்டுதலினால் எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ ஆபத்து நிகழாவண்ணம் தடுத்து நிறுத்தி உரிய பாதுகாப்பை உறுதி செய்வது காவல்துறையின், தமிழக அரசின் பொறுப்பு மற்றும் கடமை. அந்த பொறுப்பு மற்றும் கடமையை தமிழக அரசும், தமிழக காவல் துறையும் தட்டி கழிக்க நினைத்தாலும், சமூக விரோதிகளை, ஊழல் பேர்வழிகளை அடையாளம் காட்டும் என் கடமையும், பணியும் தொடரும்.


Share it if you like it