2013-ல் நீட் தேர்வு காங்., ஆட்சியில் நடைபெற்றதே என நெறியாளர் கேட்க அதற்கு ’குபீர்’ தகவல் அளித்த முன்னாள் மத்திய அமைச்சர்..!

2013-ல் நீட் தேர்வு காங்., ஆட்சியில் நடைபெற்றதே என நெறியாளர் கேட்க அதற்கு ’குபீர்’ தகவல் அளித்த முன்னாள் மத்திய அமைச்சர்..!

Share it if you like it

ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வை நடைமுறைக்கு வந்தது. வழக்கம் போல இதற்கு காங்கிரஸ், தி.மு.க மற்றும் இன்னும் பிற கூட்டணி கட்சிகள் ஏழை மாணவர்களின் நலனுக்கு விரோதமாக நீட் தேர்வு உள்ளது. அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக நீட் தேர்வு குறித்து தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் முதல்வராக இருந்த நாராயணசாமி அவர்கள் தந்தி ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் பொழுது, நெறியாளர் அசோகா அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார்.

2010-ல் G0 போட்டது காங்கிரஸ் அரசு, 2013-ல் நீட் தேர்வு காங்., ஆட்சியில் நடைபெற்று உள்ளது என நெறியாளர் கேள்வி எழுப்ப, இதற்கு நாராயணசாமி அவர்கள் எனக்கு ஞாபகம் இல்லை என்று யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத பதில் அளித்து இருப்பது. ராகுல் காந்தியை ஏமாற்றியது போல் மக்களையும் ஏமாற்ற முயற்சி செய்து உள்ளார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it