பிரதமர் மோடி ‘மாஸ்’ அட்வைஸ்: யாருக்கு தெரியுமா?

பிரதமர் மோடி ‘மாஸ்’ அட்வைஸ்: யாருக்கு தெரியுமா?

Share it if you like it

பொதுத் தேர்வு எழுத இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பாரதப் பிரதமர் மோடி பேசி இருக்கும் காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

மாணவர்களின் நலனன கருத்தில் கொண்டு மத்திய அரசு எடுத்து வரும் சட்ட, திட்டங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக, சொல்ல வேண்டும் என்றால் நீட் தேர்விற்கு மாணவர்கள், கொடுத்து வரும் வரவேற்பே சிறந்த சான்று என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில், பள்ளிக் கல்லூரிகள் செயல்பட முடியாத சூழல் இருந்தது. இதன் காரணமாக, மாணவர்கள் தங்களது படிப்பினை ஆன்லைன் மூலம் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், தேர்வு எழுதுவதும் ஆன்லைனின் நடைபெற்றது. மத்திய அரசு எடுத்த தீவிரமான நடவடிக்கையின் வாயிலாக, தற்சமயம் இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்வதற்கான ஏதுவான சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது.

அந்த வகையில், மாணவர்களிடம் இருக்கும் தேர்வு பயத்தை போக்கும் விதமாக, டெல்லியில் இருந்த படியே காணொளி வாயிலாக, மாணவர்களிடம் பாரதப் பிரதமர் மோடி பேசியதாவது; மாணவர்கள் படிப்பதில் முழு கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்களுக்கு பொதுத்தேர்தல் கண்டு பதற்றம் ஆகலாம். ஆனால், மாணவர்களாகிய நீங்கள் பயப்பட வேண்டாம் என, நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியுள்ளார். பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் மீது அக்கறை வைத்து உரையாற்றிய பிரதமர் மோடிக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.


Share it if you like it