தமிழகம் பாகிஸ்தானில் உள்ளதா?… மூவர்ணம் பூச இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்பு!

தமிழகம் பாகிஸ்தானில் உள்ளதா?… மூவர்ணம் பூச இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்பு!

Share it if you like it

தேசிய கொடியின் மூவர்ணத்தை பூச இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15 -ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ‘அமுதப் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இல்லம் தோறும் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து இருந்தது.

இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைவரும் தங்களது வாட்ஸ் ஆப், முகநூல், ட்விட்டர் என அனைத்து சமூக வலைத்தள பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுத்து இருந்தது. இதையடுத்து, கோடிகணக்கான மக்கள் தங்களது டி.பி.யில் தேசிய கொடியை வைத்து வருகின்றனர். மேலும், நாட்டு மக்கள் அனைவரும் தேசிய கொடியை தங்களது இல்லத்தில் ஏற்றி வைத்து 75-வது சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என பாரதப் பிரதமர் மோடி கேட்டு கொண்டார். இதையடுத்து, அனைவரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், மயிலாடுதுறை நகராட்சியின் அனுமதியை பெற்று அம்மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் மணிகூண்டினை தேசியக் கொடி மக்கள் இயக்கத்தின் சார்பில் மூவர்ணம் பூசி கொண்டாட முடிவு செய்து இருக்கின்றனர். மேலும், அதற்கு உரிய அனுமதியையும் அந்த இயக்கம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருப்பது தான் அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்தான, செய்தியினை இந்து முன்னணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது அதன் லிங்க் இதோ.


Share it if you like it