‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு, 751 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை !

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு, 751 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை !

Share it if you like it

காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழுக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளிதழின் வெளியீட்டாளரான ஏஜேஎல்-க்கு சொந்தமாக டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் உள்ள ரூ.661.69 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துகளையும், யங் இந்தியா நிறுவனம் ஏஜேஎல் நிறுவனத்தில் வைத்துள்ள ரூ.90.21 கோடி மதிப்பிலான பங்கு முதலீட்டையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.


Share it if you like it